சோமாலியாவில் அல்-ஷபாப் தீவிரவாதிகளை ஒடுக்க அரசாங்க படைகளுக்கு அமெரிக்கா உதவி

சோமாலியாவில் உள்ள அல்-ஷபாப் தீவிரவாதிகளை எதிர்த்து போராடும் விதமாக அரசாங்க படைகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக அமெரிக்கா அதன் துருப்புகளை சோமாலியாவுக்கு அனுப்பி உள்ளது.

சோமாலியாவில் அல்-ஷபாப் தீவிரவாதிகளை எதிர்க்க அரசாங்க படைகளுக்கு அமெரிக்கா உதவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவுக்கு அமெரிக்கா அனுப்பும் வழக்கமான படைகளில் இதுவே முதல்முறையாகும்.

சோமாலியாவில் ஏற்கனவே சிறிய அளவிலான தீவிரவாத எதிர்ப்பு அலோசகர்கள் பணியாற்றி வருகின்றனர்.

1993 ஆம் ஆண்டில் சோமாலிய தீவிரவாத குழுவினர் இடையே நடைபெற்ற மோதலில் ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு ராணுவ படையை சேர்ந்த 18 பேரை அமெரிக்கா இழந்தது குறிப்பிடத்தக்கது.

துருப்புகளை அனுப்புமாறு சோமாலிய அரசாங்கம் கோரிக்கை வைத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்