அமெரிக்காவின் பிரம்மாண்ட குண்டுவீச்சில் ஐ.எஸ் தீவிரவாதிகள் 90 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா வீசிய மிகப்பெரிய குண்டு ஒன்றில் ஐ.எஸ் குழுவை சேர்ந்த குறைந்தது 90 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பிராந்திய ஆளுநர் ஒருவர் கூறியுள்ளார்.

காணொளிக் குறிப்பு,

ஐ.எஸ் குகை மற்றும் சுரங்க அமைப்புகள் மீது வீசப்பட்ட எம் ஓ ஏ பி வெடிகுண்டு தரையை தொட்ட தருணம்

போரில் முன்னெப்போதும் அமெரிக்கா பயன்படுத்தாத மிகவும் சக்தி வாய்ந்த அணு ஆயுதமில்லா வெடிகுண்டை நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ் நிலை மீது அமெரிக்கா வீசியுள்ளது.

சுரங்கங்களின் ஒரு பிணையம் மற்றும் குகைகள் வியாழன் மாலை உள்ளூர் நேரப்படி அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நங்கர்ஹாருக்குள் இருக்கும் அச்சின் மாகாணத்தின் ஆளுநர் இஸ்மாயில் ஷின்வரி, பலியானவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்பு, அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவுமில்லை என ஐ.எஸ் தெரிவித்திருந்தது.

பொதுமக்கள் யாரும் இதில் கொல்லப்படவில்லை என்று ஷின்வரி கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்