சிரியா : பொதுமக்களை சுமந்து சென்ற பேருந்து மீது கார் குண்டு தாக்குதல்; 16 பேர் பலி

சிரியாவில் அலெப்போ அருகே அரசு கட்டுப்பாட்டிலிருந்த நகரங்களிலிருந்து வெளியேறிய பொதுமக்களை சுமந்து சென்ற வாகன தொடரணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பரஸ்பர ஒப்பந்தம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் (வெள்ளி) சிரியாவின் உள்நாட்டு போரால் இருதரப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற பகுதியில் சிக்கியுள்ளனர்.

நான்கு நகர உடன்படிக்கையின்படி, சுமார் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் 30 ஆயிரம் மக்கள் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களிலிருந்தும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள இரு நகரங்களிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், அரசாங்க கட்டுப்பாட்டிலிருக்கும் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 5,000 பேரும், போராளிகள் கட்டுப்பாட்டிலிருக்கும் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 2,200 பேரும் நடுவழியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இரான் மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்து வைத்த உடன்படிக்கையை சிரியா மீறிவிட்டதாக போராளிகள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்