போதை மருந்துக்கு அடிமையான மலைப்பாம்பு!

கடந்த ஆண்டு படிக மெத்தாம்பெடாமைன் ஆய்வகம் ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்திய ஆஸ்திரேலிய காவல்துறையினர், கிலோ கணக்கான போதைப்பொருட்களையும், போதை மருந்து தயாரிக்கும் கருவியையும், பணக்கட்டுகளையும் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

மறுவாழ்வு பெற்ற போதை மருந்துக்கு அடிமையான மலைப்பாம்பு

பட மூலாதாரம், CORRECTIVE SERVICES NSW

அந்த தேடுதல் வேட்டை இன்னொன்றையும் வெளிப்படுத்தியது. அதுதான் போதை மருந்துக்கு அடிமையான அறிகுறிகளுடன் காணப்பட்ட 6 அடி நீளமுடைய மலைப்பாம்பு. .

இந்த பாம்பு அதனுடைய தோல் வழியாக போதை மருந்து பொடிகளை உள்ளிழுத்து மயங்கியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது.

வனவிலங்கு பராமரிப்பு திட்டத்தில் பணியாற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்ட 14 கைதிகளால் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினால் போதை மருந்துக்கு அடிமையாகியிருந்த அதே மலைப்பாம்பு மிகவும் வீரியமுடைய இயல்பான குணநலத்திற்கு 7 மாதங்களிலே திரும்பியிருந்தது.

கங்காருகள், குட்டி கங்காருகள், போஸ்சும்கள், வாம்பேட் தாவர உண்ணிகள் மற்றும் உள்ளூர் பறவைகள் ஆகியவை சிட்னியிலுள்ள மிக குறைவான பாதுகாப்பு மிக்க இந்த சிறையில் பராமரிக்கப்படும் 250 விலங்குகளில் ஒன்றாக இந்த மலைப்பாம்பும் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், CORRECTIVE SERVICES NSW

காவல்துறையினரின் தேடுதல் வேட்டையின்போது கைப்பற்றப்பட்ட மேலும் சில பாம்புகளையும் ஜான் மோரோனி சீர்திருத்த மையம் கொண்டுள்ளது.

இந்த சீர்திருத்த மைய அதிகாரிகள் ஒருவரின் கூற்றுப்படி, துப்பாக்கிகளையும். போதை மருந்துகளையும் பதுக்கி வைத்திருக்கும் இடங்களை பாதுகாப்பதற்காக விஷத்தன்மை அதிகமுள்ள பாம்புகளை சில குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர்.

சட்ட ரீதியான காரணங்களுக்காக பெயர் தெரிவிக்க இயலாத இந்த மலைப்பாம்பு, போதை மருந்து குற்றச்சாட்டு வழக்கு முடிந்த பின்னர் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

பட மூலாதாரம், CORRECTIVE SERVICES NSW

கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற இந்த வனவிலங்கு சீர்திருத்த திட்டம், இங்குள்ள சிறை கைதிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதாக உள்ளது என்று சிறை அதிகாரி இவான் கல்டெர் தெரிவித்தார்.

"இந்த பராமரிப்பை வழங்குகின்ற மனிதரில் விலங்குகளோடு அவர்கள் காட்டுகின்ற அணுகுமுறை அவர்களையே மென்மையாக்கி மனிதநேயமுள்ளவர்களாக மாற்றுகிறது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

விலங்குகளை பராமரித்து பொறுப்புகளை ஏற்பதற்கு அளிக்கக்கூடிய வாய்ப்புகள் இந்த சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாகவும், நடத்தை மாற்றங்களை உருவாக்குவதாகவும் அமைகின்றன"

காணொளி: பாட்டிலில் தண்ணீர் குடித்த பாம்பு

காணொளிக் குறிப்பு,

தாகத்தை தணித்துக் கொள்ள மனிதர்களை நோக்கி வந்த பாம்பு

இந்த செய்திகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்