சகிப்புத்தன்மையை பரப்ப பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைய வேண்டும் : நவாஸ் ஷெரிஃப்

பாகிஸ்தானில் கடந்த வியாழனன்று, மத நிந்தனை குற்றச்சாட்டின்கீழ், மாணவர் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரிஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சகிப்புத்தன்மையை பரப்ப பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைய வேண்டும் : நவாஸ் ஷெரிஃப்

சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொள்பவர்களை அரசு சகித்துக்கொள்ளாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சகிப்புத்தன்மையை பரப்ப பாகிஸ்தான் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மேற்கு நகரான மர்தானில் ஊடகவியல்துறை மாணவர் மஷால் கான், ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொடூரமாக தாக்கப்பட்டு பின் சுடப்பட்டு விடுதியிலிருந்த மேல் ஜன்னல் வழியாக கீழே வீசப்பட்டார்.

மஷால் கான் பரந்த மற்றும் மதச்சார்ப்பற்ற கொள்கைகளை கொண்டிருந்ததாக சக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில், எட்டு பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்