சிரியா பேருந்து தாக்குதல்; கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகள்

சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் நகரங்களிலிருந்து வெளியேறிய பொதுமக்களை சுமந்து சென்ற பேருந்து மீது சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறைந்தது 68 பேர் குழந்தைகள் ஆவர்.

சிரியா பேருந்து தாக்குதல்; கொல்லப்பட்டர்வர்களில் 68 பேர் குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

சனிக்கிழமையன்று, அலெப்போவுக்கு அருகே அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேறிய பேருந்து தொடரணி மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று மோதியது.

வெளியேறிய மக்களில் 109 பேர், தொண்டு நிறுவன பணியாளார்கள் மற்றும் போராளி படையினர் கொல்லப்பட்டதாக பிரிட்டனிலிருந்து இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாக பல்வேறு செய்திகள் கூறுகின்றன.

இன்னும் பலர் காயமடைந்திருப்பதாகவும், பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாகவும் அந்த கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

ஆலெப்போ அருகே போராளிகள் வசமிருந்த பிராந்தியத்தில் வாகன தொடரணி காத்திருந்த போது, வெடிப்பு ஏற்பட்டது. அது பேருந்து சிதைந்தது மட்டுமின்றி, கார்களும் தீப்பிடிக்க தொடங்கின. பலியானோரின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்