சுழலும் உணவகத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்

அட்லாண்டாவில் சுழலும் உணவகத்தில் உயிரிழந்த ஐந்து வயதுச் சிறுவன்

பட மூலாதாரம், Getty Images

அட்லாண்டா உணவகம் ஒன்றில், சுவருக்கும், மெதுவாக நகரும் தரையில் பொருத்தப்பட்டுள்ள மேசைக்கும் இடையில் ஐந்து வயது சிறுவனின் தலை மாட்டிக் கொண்டதால் அவன் உயிரிழந்துள்ளான் என போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த சம்பவத்தில் குழந்தை மிகவும் மோசமாக காயமடைந்த பின்பு மருத்துவமனையில் உயிரிழந்தது.

உள்ளூர் நேரப்படி இந்த சம்பவம் மூன்று மணியளவில் நடைபெற்றது.

சம்பவம் நடைபெற்ற சன் டயல் உணவகம், மேற்கொண்டு தகவல்கள் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமையன்று உணவகத்தின் சுழலும் தரையில் குழந்தை மாட்டிக் கொண்டதும் அது உடனே நிறுத்தப்பட்டது என அட்லாண்டா போலீஸ் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தலை மற்றும் மூளையில் படுகாயமடைந்த அந்தச் சிறுவனை வெளியில் எடுக்க, உணவகத்தின் ஊழியர்கள் முயற்சி செய்தனர் என ஃபுல்டான் கவுண்டியின் மருத்துவ பரிசோதகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பொதுவாக எல்லா குழந்தைகளும் செய்வதை போல அந்த குழந்தையும் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படியோ அவன், சுழலும் தரைக்கும் சுவருக்கும் இடையே ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்டான்" என போலிஸ் செய்தி தொடர்பாளர் வாரென் பிக்கார்ட் சனிக்கிழமையன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்த சிறுவனின் உயிரிழப்பு விபத்து என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெஸ்டின் விடுதியின் உச்சியில் அந்த உணவகம் அமைந்துள்ளது; மேலும் அங்கிருந்து அட்லாண்டா நகரை 360 டிகிரி கோணத்தில் காண முடியும்.

மேலும் படிக்க:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்