துருக்கி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு : வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

துருக்கி நாடாளுமன்ற நடைமுறையிலிருந்து ஜனாதிபதி குடியரசுக்கு மாற வேண்டுமா என்பது குறித்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

துருக்கி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு : வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

பட மூலாதாரம், Getty Images

வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்குச் சீட்டுக்களில் கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை. வெறும் ஆம் மற்றும் இல்லை என்பது மட்டுமே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த விருப்பமானது துருக்கி அதிபர் ரெஜீப் தாயிப் எர்துவனால் பரிந்துரைக்கப்பட்டதாகும்.

அதன்படி, துருக்கியில் பிரதமர் பதவி ஒழிக்கப்பட்டு, அதிபருக்கு அதிக அதிகாரம் வழங்கப்படும்.

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள், உள்ளூர் நேரப்படி இன்று மாலைக்குள் தெரியவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்