டைனோசர்களின் உறவினர்கள் பற்றி விஞ்ஞானிகளின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு

டைனோசர்களின் முந்தைய உறவினர்களின் சில அம்சங்கள் தற்கால முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்றவற்றுடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

டைனோசர்களின் உறவினர்கள் பற்றி விஞ்ஞானிகளின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், GABRIEL LIO

பல புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முந்தைய டைனோசர் உறவினர்கள் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த காலகட்டத்தில் புதைபடிவ பதிவு என்பது அபூர்வமானவை.

அவை இருகால்களால் நடந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். பார்க்க டைனோசர்களின் சிறிய வடிவங்களைப்போல இருந்ததாக கூறுகிறார்கள்.

ஆனால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரினமானது முதலைகள் போன்று நான்கு கால்களில் நடத்திருக்கலாம் என்று நேச்சர் நாளேடு தெரிவித்துள்ளது.

இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை உயரம் கொண்ட இந்த இறைச்சி உண்ணும் விலங்கு, தெற்கு தான்சானியாவில் தோண்டி எடுக்கப்பட்டது. சுமார் 245 மில்லியன் ஆண்டுகளுக்குமுன் டிரையாஸிக் காலத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவை முன் தேதியிட்ட முந்தைய கால டைனோசர்கள்.

லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தை சேர்ந்த பேராசிரியரும், புதிய கண்டுபிடிப்பு குறித்து வெளியிட்ட எழுத்தாளர்களில் ஒருவருமான பால் பார்ரேட், இது ஒரு சின்ன விலங்கு. டெலோகிராட்டர் என்றழைக்கிறோம். அது பெரியதில்லை. சராசரி குடும்பங்களில் வளர்க்கப்படும் நாயின் எடையை டெலோகிராட்டர் அநேகமாக கொண்டிருக்கும்.''

மிகப்பெரிய குழுவான ஆர்கோசாரஸ் என்று அறியப்படும் விலங்குகள் பிரிந்தபோது, ஒன்று டைனோசராகவும், மற்றொன்று தற்போதுள்ள அலிகேட்டர்கள் மற்றும் முதலைகள் எனவும் பிரிந்தன. அதனைத்தொடர்ந்தே டெலியோகிராட்டர் ராடினஸ் தோன்றியது.

பட மூலாதாரம், GABRIEL LIO

தான்ஸானியாவில் 1933 ஆம் ஆண்டில் டெலியோகிராட்டருக்கு சொந்தமான முதல் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 1950களில் ஆராய்ச்சி செய்யப்பட்டன. ஆனால், கணுக்கால் போன்ற முக்கிய எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளில் காணாமல் போயிருந்தன.

அதனால், அந்த நேரத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள் முதலைகள் மற்றும் டைனோசர்களில் யாருக்கு அதிகம் நெருங்கிய தொடர்புடையது என்பதை விஞ்ஞானிகளால் கூறமுடியவில்லை.

2015 ஆம் ஆண்டு கிழக்கு ஆஃப்ரிக்க நாட்டில் புதிய மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன. இது பல விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலாக அமைந்தது.

அமெரிக்கா பிளாக்ஸ்பெர்கில் உள்ள விர்ஜீனியா டெக்கை சேர்ந்தவரும், புதிய ஆய்வின் எழுத்தாளர்களில் ஒருவருமான ஸ்டெர்லிங் நெஸ்பிட்,''டைனோசர் உறவினர்களின் முந்தைய வரலாறு குறித்த நமது புரிதல்களில் டெலியோகிராட்டரின் கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.''

டெலியோகிராட்டர் உள்பட மற்ற பிற டைனோசர் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா, இந்தியாவுக்கு, பிரேசிலுக்கு என பரவலாக பல பிராந்தியங்களில் வசித்து வந்துள்ளனர்.

இந்த குழுவின் அடுத்து மிகப்பெரிய திட்டம் மீண்டும் தெற்கு தான்ஸானியாவுக்கு திரும்பி டெலியோகிராட்டரின் மேலும் எஞ்சியுள்ள பகுதிக்கும் மற்றும் காணாமல் போன துண்டுகளையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்