ஜனநாயக வழியில் சர்வாதியாகிறாரா துருக்கி அதிபர்?

ஜனநாயக வழியில் சர்வாதியாகிறாரா துருக்கி அதிபர்?

துருக்கிய அரசியல் சட்டம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவை எதிர்த்து நீதிமன்றங்களை நாடப்போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.

வாக்கெடுப்பில் ஐம்பத்தியோரு சதவீதம் பேர் அதிபரின் மாற்றங்களை ஆதரித்திருந்தனர்.

இந்த முடிவு உறுதிசெய்யப்பட்டால் நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைக்கு பதிலாக அனைத்து அதிகாரங்களும் அதிபரின் கைகளில் குவியும்.

ஆனால் வாக்கெடுப்பில் பரவலான முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ள நாட்டின் பிரதான எதிர்கட்சி, இந்த வாக்கெடுப்பு முடிவுகளை மொத்தமாக ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளது.