காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் : நேரில் கண்டது பிபிசி

காங்கோ ஜனநாயக குடியரசின் ஆயுதப் படைகள் கண்மூடித்தனமான கொலைகளை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் இடத்தில் மனித புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை பிபிசி குழு நேரில் பார்த்தது. கசாய் என்ற மத்திய பிராந்தியத்தில் உள்ளூர் போராளிகளால் எழுந்துள்ள கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் முயல்கிறது. இந்த குற்றங்கள் தொடர்பாக விசாரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஐநா பணியாளர்கள் இருவர் இந்த பகுதியில் தான் கடத்திக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் இதுவரை நானூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.