பொதுமன்னிப்பு திட்டம்: சௌதியிலிருந்து சட்டவிரோத தொழிலாளர்கள் வெளியேறுவார்கள்?

சௌதி அரேபியாவில் தற்போது அமலில் உள்ள பொதுமன்னிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறைந்தது ஒரு மிலியன் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக சௌதி அரசு கூறுகிறது.

கோப்புப் படம்

பட மூலாதாரம், VEERSINGH

படக்குறிப்பு,

கோப்புப் படம்

சௌதி அரேபியாவுக்கு, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்தும், ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களிலிருந்தும் குடியேறிகள் வருகிறார்கள்.

அவர்களில் பலர் சட்டவிரோதமாக அங்கு வேலை செய்கிறார்கள்.

ஆனால், கடந்த மாதம் சௌதி அரசு, 90 நாள் பொதுமன்னிப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தது, அதன்படி, தமது சட்டவிரோத குடியேறி அந்தஸ்து குறித்த விவரங்களை வெளியிட முன்வரும் எவருக்கும் அபராதம் விதிக்கப்படாது அல்லது மற்றெந்த வழிகளிலும் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் .

அவர்கள் தங்களது வேலை நிலையை ஒழுங்குபடுத்திக்கொள்ளவோ அல்லது சௌதி அரேபியாவை விட்டு வெளியேறவோ வாய்ப்பு தரப்படுவார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்