பிரான்ஸில் இரு சந்தேக நபர்கள் கைது: அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சியா?

பிரான்ஸில் ஞாயிறன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன் அங்கு ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட இரு இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளை பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸில் இரு சந்தேக நபர்கள் கைது: அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சியா?

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

பிரான்ஸில் இரு சந்தேக நபர்கள் கைது: அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயற்சியா?

பிரான்ஸின் தென்பகுதி நகரான மார்செயில் நட்த்தப்பட்ட சோதனைகளின்போது, துப்பாக்கிகளும், குண்டு தயாரிக்க உதவும் ரசாயனப் பொருட்களும், கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் கூறின.

பிரெஞ்சு உள்துறை அமைச்சர் மத்தியாஸ் ஃபெக்கல், ஒரு தாக்குதல் உடனடியாக நடத்தப்படவிருந்தது என்று கூறினார்.

வேட்பாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை மோன்ப்பெய்யர் நகரில் நடக்கவுள்ள மத்திய வலது சாரி வேட்பாளர், பிரான்சுவா ஃபியோனுக்கு ஆதரவான தேர்தல் பேரணி ஒன்றில் குறிபார்த்துச் சுடும் வல்லமை பெற்ற போலிசார் நிலை நிறுத்தப்படுவார்கள் என்று செய்திகள் கூறின.

ஞாயிறன்று நடக்கவுள்ள முதல் சுற்றுத் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களான, எம்மானுவேல் மேக்ரோன் மற்றும் மரின் லெ பென் ஆகியோருக்கு , சந்தேக நபர்களின் புகைப்படங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

காணொளிக் குறிப்பு,

பிரிட்டனில் அலுவலகம் செல்லும் நாய்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்