விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன்

லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

விஜய் மல்லையாவுக்கு நிபந்தனை ஜாமீன்

8 லட்சம் டாலர்களுக்கும் மேலாக ஜாமீன் தொகையாக கட்ட வேண்டும் மற்றும் தனது பாஸ்போர்ட்டை சரணைடைய வேண்டும் என்ற நிபந்தனைகளின்படி விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

முன்னதாக இன்று காலையில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார்.

விஜய் மல்லையாவை தாங்கள் கைது செய்துள்ளதை லண்டன் பெருநகர போலீஸ் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக லண்டன் பெருநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இந்திய அதிகாரிகளின் சார்பாக லண்டன் பெருநகர போலீஸின் நீதிமன்ற விசாரணைக்கு நாடு கடத்தும் பிரிவு கைது செய்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

தற்போது செயலிழந்த நிலையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தில் நடந்த நிதி மோசடிகள் மற்றும் இந்திய வங்கிகளுக்கு 9000 கோடி ரூபாய் செலுத்த தவறியதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள விஜய் மல்லையாவுக்கு கிரிக்கெட் மற்றும் மோட்டார் பந்தய விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்