வடகொரியா பதற்றம் : அணுஆயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா 'தீவிரமாக கவலை'

வடகொரிய உயரதிகாரி ஒருவர் பிபிசிக்கு அளித்த பேட்டியை அடுத்து, வடகொரியா அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்துவருவது குறித்து தீவிரமான கவலைகள் கொண்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

வடகொரியாவின் வெளியுறவு துணையமைச்சர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், வட கொரியா தனது ஏவுகணை சோதனைகளை தொடரும் என்றும், அமெரிக்கா தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக அது கருதினால், முன்கூட்டியே அணுஆயுத தாக்குதலை நடத்தும் என்றும் கூறியிருந்தார்.

நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் சீனா எதிர்ப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் லூ காங் கூறியுள்ளார்.

வடகொரியா - அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அண்மை நாட்களில் இரு நாடுகளும் சூடான வாத-பிரதிவாதங்களில் ஈடுபட்டுள்ளன. கொரிய தீபகற்ப பிராந்தியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வடகொரியாவுடான "உத்திரீதியிலான பொறுமை காக்கும் சகாப்தம்" முடிந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

தனது பாரம்பரிய நட்பு நாடான வடகொரியாவின் நடவடிக்கைகளால் சீன அரசின் கவலைகள் அதிகரித்திருப்பது போல் தோன்றுவதாக பெய்ஜிங் பி.பி.சி செய்தியாளர் ஸ்டீபென் மெக்டனல் கூறுகிறார்.

இது குறித்த பிற செய்திகள்:

"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

வடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா

வடகொரியாவின் புதிய ஏவுகணை முயற்சி தோல்வி

`எங்களது பாணியில் அணு ஆயுத தாக்குதல் பதிலடி' - மிரட்டுகிறது வடகொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்