பிரிட்டனில் பொது தேர்தல் நடத்த தெரீசா மே முடிவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

  • 19 ஏப்ரல் 2017

பிரிட்டனில் ஜூன் 8 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பொது தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை HoC

பிரிட்டனில் பொது தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் தெரீசா மே நேற்று அறிவித்தார்; அதற்கு இன்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவிற்கு 522 உறுப்பினர்கள் ஆதரவும், 13 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேற்பட்ட ஆதரவுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் மூலம் பெறப்படும் புதிய ஆணை, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும், மேலும் எதிர்காலத்திற்கு அது நிச்சயமான ஒரு சூழலை வழங்கும் என பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

பொது தேர்தல் முடிவை வரவேற்றுள்ள எதிர்கட்சி தலைவர் ஜெர்மி கார்பன், அடுத்தடுத்து பல விஷயங்களில், பிரதமர் தெரீசா மே, தனது மனதை மாற்றிக் கொள்வதாகவும் வாக்குறுதிகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த பொது தேர்தல் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டும் ஆனால், குறிப்பிட்ட கால நாடாளுமன்ற சட்டத்தின் படி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் தேர்தலை விரும்பும் நேரத்தில் முன்னதாகவும் நடத்தலாம்.

இது குறித்த பிற செய்திகள்:

பிரிட்டனில் பொதுத் தேர்தல்: பிரதமர் தெரீசா மே 'திடீர்'அறிவிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் 'திடீர்' அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்