எம்ஹெச்370 விமானம் வேறு பகுதியில் விழுந்திருக்கலாம் - புதிய ஆய்வு

காணாமல்போன மலேசிய விமானம் 370இன் உடைந்த பாகங்கள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமென தோன்றுவதை புதிய சான்று உறுதி செய்வதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை EPA

2014 ஆம் ஆண்டு 239 பேர் பயணித்த எம்ஹெச்370 விமானம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டது.

இந்த விமானத்தின் பாகங்களை கடலில் தேடிவந்த நிலையில், ஜனவரி மாதத்தில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன.

உண்மையான போயிங் 777 ரக விமானத்தின் இறகு பகுதி, நீரோட்டத்தால் அடித்து செல்லப்படும் மாதிரியை முதல்முறையாக ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், எம்ஹெச்370 விமானம் எங்கிருக்கலாம் என்று கணித்த டிசம்பர் மாத அறிக்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

காணொளி: காணாமல்போன மலேஷிய விமான நிறுவனம் இழப்பீடு தராமல் தட்டிக்கழிக்க முயல்கிறதா?

மாயமான மலேசிய விமானத்தை தனிப்பட்ட முறையில் தேட நிதி திரட்டல்

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் நிபுணர்கள் புதிய தகவல் வெளியீடு

இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் முன்னதாக தேடுதல் வேட்டை நடத்திய பகுதிக்கு அப்பால் வடக்கில் 25 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் இந்த விமானம் காணப்படலாம் என்று அவர்கள் குறித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்கு முன்னர், விமானத்தின் இறகுப்பகுதி நீரோட்டத்தில் அடித்து செல்லும் மாதிரியை சோதித்து கண்டறிந்ததைவிட, அந்த ரக விமானத்தின் உண்மையான இறகுப்பகுதியை பயன்படுத்தி இப்போது சோதனை மேற்கொண்டிருப்பது இன்னும் துல்லியமாக கணிக்க வைத்திருப்பதாக ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் டாக்டர் டேவிட் கிரிப்ஃபின் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக, ரியூனியன் தீவில் கிடைத்த விமானத்தின் இறகு பகுதியின் சரியான மாதிரியை பயன்படுத்தி, நீரோட்டத்தில் அடித்து செல்லும் மாதிரியை கண்டறிந்ததாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

விமானத்தின் உண்மையான இறகுப்பகுதி, நாங்கள் நினைத்ததுபோலவே, 20 டிகிரி இடதுப்புறமாக, மாதிரியை விட வேகமாக செல்வதை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம் என்று டாக்டர் கிரிப்ஃபின் கூறியுள்ளார்.

காணாமல் போன மலேசிய விமானம் கடலில் கட்டுப்பாடற்ற வகையில் இறங்கியிருக்கலாம் - அறிக்கை

MH-370: காணாமல்போன விமானம் பற்றி மலேசியா ஆய்வறிக்கை

"இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், விமானத்தின் இறகுப்பகுதி 2015 ஆம் ஆண்டு லா ரியூனியனில் கிடைத்த்தைப் புரிந்து கொள்ள முடிகிறது"

"விமானம் விழுந்த "குறிப்பிட்ட இடத்தை" தெரிவிக்காத்தால், டிசம்பர் மாத அறிக்கை புதிய தேடலுக்கான அடிப்படையாக அமைந்துவிடாது" என்று கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் தாரென் செஸ்டர் தெரிவித்திருந்தார்.

மேலதிக தகவல்கள்

மலேசிய விமானத்தைத் தேடும் இந்தியக் கடற்படை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்