ஆஸ்திரேலிய தஞ்சம் கோரிகள் - ஒபாமா அரசின் ஒப்பந்தத்தை ஏற்றது டிரம்ப் நிர்வாகம்

  • 22 ஏப்ரல் 2017

ஆஸ்திரேலியா உடன் திட்டமிட்டிருந்த குடியேறிகளுக்கான ஓர் மீள்குடியேற்ற ஒப்பந்தத்தை செயல்படுத்துவது பற்றி அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption துணை அதிபர் மைக் பென்ஸ் உடன் அஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை முன்பு முட்டாள்தனமானது என்று தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் வர்ணித்திருந்தார்.

இந்த உடன்படிக்கையின்படி, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கேட்டு குடிபெயர்ந்தோரில் 1,250 பேரை அமெரிக்காவில் குடியமர்த்த முடியும்.

இதற்கு பிரதிபலனாக, குவாட்டமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சால்வடோர் ஆகிய பகுதிகளில் அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய ஆஸ்திரேலியாவின் பிரதமர் மால்கம் டர்ன்புல் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், பிரதமர் மால்கம் டர்ன்புல் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் மதிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் போற்றப்படுவதற்கான அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தஞ்சம் கோரி வந்தவர்களை ஏற்றுக்கொள்ள சர்ச்சைக்குரிய வகையில் மறுத்துவந்தது. அவர்களில் பெரும்பாலனவர்கள் இரான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கை சேர்ந்த ஆண்கள் ஆவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்