'பொதுநலன் சார்ந்த' செய்தியை வெளியிடாத ஏழு ஊடக நிறுவனங்களுக்கு எக்வடோர் அரசு அபராதம்

  • 23 ஏப்ரல் 2017

பொதுநலன் மிக்கதாக அரசால் கருதப்பட்ட ஓர் செய்தியை வெளியிட தவறியதற்காக ஏழு ஊடக நிறுவனங்களுக்கு எக்வடோர் அரசு அபராதம் விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்த உத்தரவு நாட்டிலுள்ள சில மிகப்பெரிய செய்தி நிறுவனங்களை பாதித்துள்ளது.

எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதியும், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் வேட்பாளருமான கியெர்மோ லாசோவின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு இருந்ததாக அரசு ஊடகங்களின் கண்காணிப்பகம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம், அர்ஜென்டினாவில் வெளிவரும் நாளிதழ் ஒன்றில் இந்த விசாரணை குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஊடக நிறுவனங்கள் தணிக்கை முறை குறித்து ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் தேர்தலின் வேட்பாளருமான கியெர்மோ லாசோவின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு இருந்ததாக அரசு ஊடகங்களின் கண்காணிப்பகம் கருத்து

எல் கமெர்சியோ, லா ஹோர, எக்ஸ்பிரஸோ மற்றும் எல் யூனிவெர்சோ ஆகிய நாளிதழ்கள், டெலிவிசென்ட்ரோ, டெலிஅமோசனாஸ் மற்றும் ஈக்குயுவிசா ஆகிய தொலைக்காட்சிகளுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்காம் என்று அறியப்படும் இந்த கண்காணிப்பு குழு, 10 செய்தியாளர்களின் அடிப்படை ஊதியத்திற்கு சரிசமமாக சுமார் 3,750 டாலர்களை நிறுவனங்களுக்கு அபராதமாக விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்