உலகிலேயே முதல்முறையாக மலேரியாவுக்கு தடுப்பூசி

மலேரியாவுக்கான முதல் தடுப்பூசி கானா, கென்யா மற்றும் மலாவியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு தொடங்கி, இரண்டு ஆண்டுகளில் ஏழரை லட்சம் சிசுக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த தடுப்பூசி, பத்தில் நான்கு பேருக்கு மலேரியா ஏற்படுவதை தடுப்பதாக, பரிசோதனை முடிவுகள் பரிந்துரைத்ததை அடுத்து, உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மலேரியா தடுப்பு மருந்து தயார்

மலேரியா கொசுக்களை தடுக்கும் கோழிகள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொசுக் கடியினால் பரவும் மலேரியா பாதிப்பினால், ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Science Photo Library

ஒருவருக்கு இந்த புதிய தடுப்பூசி மொத்தம் நான்கு முறை வழங்கப்படவேண்டும். மாதம் ஒரு முறை என்று முதல் மூன்று முறைகளும், அதன் பிறகு 18 மாதங்கள் கழித்து நான்காவது முறையாக இந்த தடுப்பூசியை போடவேண்டும்.

சுகாதார வசதிகள் குறைவாக உள்ள உலகின் பல பகுதிகளில், இதை செய்ய முடியுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

காணொளி: மலேரிய புது மருந்து மரணங்களை குறைக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மலேரிய புது மருந்து மரணங்களை குறைக்குமா?

மேலதிக தகவல்களுக்கு:

பிரிட்டனில் முதல் முறையாக தோல்வியடைந்த மலேரியா சிகிச்சை: மருத்துவர்கள் கவலை

கச்சத்தீவு, மன்னார் பகுதிகளில் மலேரியா பரவலை தடுக்க நடவடிக்கை

மலேரியா இல்லாத நாடு இலங்கை - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

மலேரியா தடுப்பு மருந்துக்கு சாதகமான சமிக்ஞை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்