கொரிய தீபகற்பத்தைச் சூழும் கரிய போர் மேகங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொரிய தீபகற்பத்தை சூழும் கரிய போர் மேகங்கள்

  • 25 ஏப்ரல் 2017

வடகொரிய இராணுவம், தனது ஆண்டுவிழாவையொட்டி மிகப்பெரிய இராணுவ தளவாட செயற்பாட்டு ஒத்திகையை நிகழ்த்தியிருக்கிறது.

அதே பிராந்தியத்தில் தென்கொரியாவும் அமெரிக்க போர்க்கப்பல்களோடு இணைந்து போர் ஒத்திகையை நடத்தியுள்ளது.

இதுவரை இல்லாத நிகழ்வாக, அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அனைவரும் இன்று (25-04-2017) மாலை ஒரு சந்திப்புக்காக வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வடகொரிய விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்படும்.

கொரிய தீபகர்ப்பத்தை போர் மேகங்கள் சூழத்துவங்கியுள்ள சூழலில் அதுகுறித்த சர்வதேச கவலைகளும் அதிகரித்து வருகின்றன.