ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தும் உடற்பயிற்சி: யார், என்ன பயிற்சி செய்ய வேண்டும்?

வாரத்தில் பலமுறை மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மனகை கூர்மையாக வைத்திருக்க சிறந்த வழி என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆபத்துக்களைத் தடுத்து நிறுத்தும் உடற்பயிற்சி

இதயத்திற்கும், தசைகளுக்கும் வழக்கமான அடிப்படையில் மக்கள் உடற்பயிற்சி வழங்கி வந்தால், சிந்திப்பதும், ஞாபக திறன்களும் அதிகமாக மேம்படுகிறது என்று 39 ஆய்வுகளில் செய்யப்பட்ட மீளாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அறிவாற்றல் குறைவதற்கான அறிகுறிகளை ஏற்கெனவே கொண்டிருந்தவர்களிடம் நடத்திய சோதனையில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

எந்தவொரு வயதிலும் உடற்பயிற்சி செய்வது மனதிற்கும், உடலுக்கும் சிறந்தது என்கிறர்கள் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள்.

மிகவும் சவால் நிறைந்த உடற்பயிற்சிகளை செய்ய முடியாத 50 வயதிற்கு மேலானோருக்கு, தாய் ச்சி போன்ற உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று பிரிட்டிஷ் ஜெனல் ஆப் ஸ்போட்ஸ் மெடிசின் என்கிற இதழில் வெளியான இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

மூளைக்கு உத்வேகம்

நீரிழிவு வகை 2 மற்றும் சில புற்றுநோய்கள் உள்பட பல நோய்கள் வருவதற்கான ஆபத்தை உடல் அளவில் செயல்படுவது குறைத்துவிடுவது நீண்டகாலமாக தெரிந்த விடயமாகும். நடுத்தர வயதில் நாம் நுழைகின்றபோது, மூளையின் இயல்பான திறன் குறைந்துவிடாமல் மாற்றிவிடுவதில் இது பங்காற்றுவதாக கருதப்படுகிறது.

உடற்பயிற்சியின் மூலம் அதிக ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மூளை பெறுகிறது. அதனால், மூளை நலமாக இருக்க உத்வேகம் அல்லது தூண்டுதல் கிடைப்பதோடு, புதிய நாளங்கள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்த உதவுகின்ற ஹார்மோன்களின் வளர்ச்சிக்கும் உத்வேகம் கிடைக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உடற்பயிற்சி: யார், என்ன பயிற்சி செய்ய வேண்டும்?

முந்தைய ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கையில், வயதுவந்தோரின் மூளை செயல்பாட்டில், குறைந்தது 4 வாரங்களுக்கு என்று திட்டமிட்டு நடத்திய உடற்பயிற்சி எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கான்பெரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கவனித்தனர்.

மூளையின் செயல் திறனில் முக்கிய பங்கு

பல்வேறு வைகையான மூளை சோதனைகளில், சிந்தித்தல், கற்றுக்கொள்ளுதல் மற்றும் பகுத்தறிதல் போன்ற அறிவாற்றல் திறன்களை ஏரோபிக் உடற்பயிற்சி மேம்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

ஞாபகம் வைத்துக் கொள்வதிலும், நிர்வாக செயல்பாடு என்று கூறப்படும் திட்டமிடும் மற்றும் ஒருங்கிணைப்பு செய்கின்ற மூளையின் திறனிலும் உடற்பயிற்சி, உதாரணமாக, எடைகளை பயன்படுத்துவது, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூளையின் நலத்தை மேம்படுத்துவதற்கு, இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் 50 வயதுக்கு மேலானோருக்கு பரிந்துரை செய்வதற்கு போதுமானதாக இந்த கண்டுபிடிப்புக்கள் உள்ளன என்று இந்த ஆய்வின் ஆசிரியரும், கான்பெராவிலுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளருமான ஜோ நோர்த்தே தெரிவித்திருக்கிறார்.

"வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் கூட, அறிவாற்றல் செயல்பாட்டில் மேம்பாடுகள் தோன்றுகின்றன. ஆனால், அதிக உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த மேம்பாடுகள் அதிகமாக காணப்பட்டன" என்று அவர் கூறியுள்ளார்.

மிதமான உடற்பயிற்சி செய்கின்றபோது, மக்கள் உரையாடல் செய்கின்ற அளவுக்கு மிதமான அசைவுகளாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயதுவந்தோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டையும், முக்கிய தசைகளுக்கான உடற்பயிற்சியை வாரத்திற்கு இரண்டு அல்லது அதைவிட அதிக நாட்கள் செய்ய தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

கனமான பொருட்கள் வாங்கும் பைகள்

"எந்தவித உடல் சார்ந்த செயல்பாடுகளும் மூளைக்கும் உடலுக்கும் நல்லதாகவே அமைந்தது" என்று இங்கிலாந்து பொது சுகாதார சேவை வயதுவந்தோர் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கான தலைவர் மருத்துவர் ஜெஸ்டின் வார்னே கூறியுள்ளார்.

10 நிமிடங்கள் செய்கிற ஒவ்வொரு உடற்பயிற்சியும் சில பயன்களை அளிக்கின்றது. ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்திற்கான வாய்ப்பு, மூன்றில் ஒரு பகுதி ஞாபக மறதியை மாற்றி எந்தவொரு வயதிலும் மனநலத்திற்கு உத்வேகமும், தூண்டுதலும் அளிக்கிறது.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption உடற்பயிற்சிகள் மூளையின் செயல் திறனில் முக்கிய பங்குவகிக்கின்றன

"ஏரோபிக் மற்றும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்வது பலவகை சுகாதார நலன்களை பெற்றிட செய்கிறது"

மிதிவண்டி சவாரி அல்லது வேலைக்கு நடந்து செல்வது ஏரோபிக் செயல்பாடு போல அமையும். கனமான பொருட்கள் வாங்கும் பைகளை சுமந்து செல்வது வலிமையான உடற்பயிற்சி செய்வதற்கான எடுத்துக்காட்டுக்களில் ஒன்றாகும்.

ஆய்வின் முக்கியத்துவம்

"உடற்பயிற்சி எவ்வாறு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான படத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் பிரச்சனைகள் உள்ளன" என்று கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் உளவியல் பேராசிரியர் மருத்துவர் டியன் பெர்னட் இந்த ஆய்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

"50 வயதுக்கு மேலானோர் மன அளவில் நலமோடு இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அழுத்தங்கள் அதிகரிக்க செய்ய இந்த ஆய்வு இட்டுசெல்லலாம். இது நல்லது தான். ஆனால், நமக்கு வயது ஆக ஆக, நம்முடைய உடல்கள் திறன்கள் குறைந்து போய், உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதும் கடினமாகி வருகின்ற உண்மையை இந்த ஆய்வு கவனிக்க தவறியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் உடற்பயிற்சிகள் ஒரு முறையே தவிர அதுவே முழுமையானதல்ல"

உடல் அளவில் சிறந்த செயல்பாட்டில் இருப்பதை போல சம்மான அளவு முக்கியத்துவத்தை, மனதளவில் செயல்படுவது, சீரான உணவு உண்பது, மிதமாக குடிப்பது மற்றும் புகை பிடிக்காமல் இருப்பது மூலம் நமது மூளைகளை கவனித்து பராமரிப்பதும் நடக்கிறது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் அல்சைமர்ஸ் ஆய்வகத்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் ரெனோல்ட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

நீரிழிவு வகை 2 மற்றும் சில புற்றுநோய்கள் உள்பட பல நோய்கள் வருவதற்கான ஆபத்தை உடல் அளவில் செயல்படுவது குறைத்துவிடுவது நீண்டகாலமாக தெரிந்த விடயமாகும். நடுத்தர வயதில் நாம் நுழைகின்றபோது, மூளையின் இயல்பான திறன் குறைந்துவிடாமல் மாற்றிவிடுவதில் இது பங்காற்றுவதாக கருதப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Thinkstock

உடற்பயிற்சியின் மூலம் அதிக ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மூளை பெறுகிறது. அதனால், மூளை நலமாக இருக்க உத்வேகம் அல்லது தூண்டுதல் கிடைப்பதோடு, புதிய நாளங்கள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்த உதவுகின்ற ஹார்மோன்களின் வளர்ச்சிக்கும் உத்வேகம் கிடைக்கிறது.

முந்தைய ஆய்வுகளை பகுப்பாய்வு செய்து பார்க்கையில், வயதுவந்தோரின் மூளை செயல்பாட்டில், குறைந்தது 4 வாரங்களுக்கு என்று திட்டமிட்டு நடத்திய உடற்பயிற்சி எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று கான்பெரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கவனித்தனர்.

மூளையின் செயல் திறனில் முக்கிய பங்கு

பல்வேறு வைகையான மூளை சோதனைகளில், சிந்தித்தல், கற்றுக்கொள்ளுதல் மற்றும் பகுத்தறிதல் போன்ற அறிவாற்றல் திறன்களை ஏரோபிக் உடற்பயிற்சி மேம்படுத்துவதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

ஞாபகம் வைத்துக் கொள்வதிலும், நிர்வாக செயல்பாடு என்று கூறப்படும் திட்டமிடும் மற்றும் ஒருங்கிணைப்பு செய்கின்ற மூளையின் திறனிலும் உடற்பயிற்சி, உதாரணமாக, எடைகளை பயன்படுத்துவது, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

மூளையின் நலத்தை மேம்படுத்துவதற்கு, இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் 50 வயதுக்கு மேலானோருக்கு பரிந்துரை செய்வதற்கு போதுமானதாக இந்த கண்டுபிடிப்புக்கள் உள்ளன என்று இந்த ஆய்வின் ஆசிரியரும், கான்பெராவிலுள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கான ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஆய்வாளருமான ஜோ நோர்த்தே தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Thinkstock
Image caption உடற்பயிற்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளையும் நீட்டிக்கும்

"வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை நீங்கள் மிதமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் கூட, அறிவாற்றல் செயல்பாட்டில் மேம்பாடுகள் தோன்றுகின்றன. ஆனால், அதிக உடற்பயிற்சி செய்து வந்தால் இந்த மேம்பாடுகள் அதிகமாக காணப்பட்டன" என்று அவர் கூறியுள்ளார்.

மிதமான உடற்பயிற்சி செய்கின்றபோது, மக்கள் உரையாடல் செய்கின்ற அளவுக்கு மிதமான அசைவுகளாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வயதுவந்தோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டையும், முக்கிய தசைகளுக்கான உடற்பயிற்சியை வாரத்திற்கு இரண்டு அல்லது அதைவிட அதிக நாட்கள் செய்ய தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

கனமான பொருட்கள் வாங்கும் பைகள்

"எந்தவித உடல் சார்ந்த செயல்பாடுகளும் மூளைக்கும் உடலுக்கும் நல்லதாகவே அமைந்தது" என்று இங்கிலாந்து பொது சுகாதார சேவை வயதுவந்தோர் சுகாதாரம் மற்றும் நலவாழ்வுக்கான தலைவர் மருத்துவர் ஜெஸ்டின் வார்னே கூறியுள்ளார்.

10 நிமிடங்கள் செய்கிற ஒவ்வொரு உடற்பயிற்சியும் சில பயன்களை அளிக்கின்றது. ஒரு வாரத்தில் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்திற்கான வாய்ப்பு, மூன்றில் ஒரு பகுதி ஞாபக மறதியை மாற்றி எந்தவொரு வயதிலும் மனநலத்திற்கு உத்வேகமும், தூண்டுதலும் அளிக்கிறது.

"ஏரோபிக் மற்றும் வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்வது பலவகை சுகாதார நலன்களை பெற்றிட செய்கிறது"

மிதிவண்டி சவாரி அல்லது வேலைக்கு நடந்து செல்வது ஏரோபிக் செயல்பாடு போல அமையும். கனமான பொருட்கள் வாங்கும் பைகளை சுமந்து செல்வது வலிமையான உடற்பயிற்சி செய்வதற்கான எடுத்துக்காட்டுக்களில் ஒன்றாகும்.

ஆய்வின் முக்கியத்துவம்

"உடற்பயிற்சி எவ்வாறு மூளையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான படத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளது. ஆனால், இன்னும் பிரச்சனைகள் உள்ளன" என்று கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் உளவியல் பேராசிரியர் மருத்துவர் டியன் பெர்னட் இந்த ஆய்வு பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

"50 வயதுக்கு மேலானோர் மன அளவில் நலமோடு இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற அழுத்தங்கள் அதிகரிக்க செய்ய இந்த ஆய்வு இட்டுசெல்லலாம். இது நல்லது தான். ஆனால், நமக்கு வயது ஆக ஆக, நம்முடைய உடல்கள் திறன்கள் குறைந்து போய், உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதும் கடினமாகி வருகின்ற உண்மையை இந்த ஆய்வு கவனிக்க தவறியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் உடற்பயிற்சிகள் ஒரு முறையே தவிர அதுவே முழுமையானதல்ல"

உடல் அளவில் சிறந்த செயல்பாட்டில் இருப்பதை போல சமமான அளவு முக்கியத்துவத்தை, மனதளவில் செயல்படுவது, சீரான உணவு உண்பது, மிதமாக குடிப்பது மற்றும் புகை பிடிக்காமல் இருப்பது மூலம் நமது மூளைகளை கவனித்து பராமரிப்பதும் நடக்கிறது என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் அல்சைமர்ஸ் ஆய்வகத்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் ரெனோல்ட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செனகல் மக்களின் உடற்பயிற்சி வெறி

பின்வரும் செய்திகளில் நீங்கள் ஆர்வம் காட்டலாம்:

இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்தார், பின்னர் மூன்றாவதும் சேர்ந்தது

வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

காஷ்மீரின் “கல்வீசும் பெண்கள்” (புகைப்படத் தொகுப்பு)

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி ஆபத்தானது?

500 கிலோ பெண்ணின் எடை குறைப்பு நிஜமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்