69 ஆண்டுகள் திருமண பந்தம்: மரணத்தாலும் பிரிக்க முடியாத தம்பதி

69 ஆண்டுகள் திருமண பந்தத்தில் நெருக்கமாக வாழ்ந்த இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதி, ஒரு மணிநேர இடைவெளியில், அடுத்தடுத்து காலமானதாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Family handout

சனிக்கிழமையன்று அல்சைமர்ஸ் நோயால் இறந்துபோன 89 வயதான தெரசாவோடு, 91 வயதான ஐசக் வாட்கின், கைகோர்த்த நிலையில் இறந்துவிட்டதாக டெய்லி ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தெரசா இறந்த 40 நிமிடங்களுக்கு பிறகு ஐசக் இறந்துபோனார்.

அவர்கள் இருவரும் இறப்பிலும் ஒன்றாக இருந்திருப்பதை நினைத்து ஆறுதலடைவதாக குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

கிறித்துவ - முஸ்லிம் ஜோடிகள் இணைவதில் சவால்கள்

இந்தியாவின் சர்ச்சையை கிளப்பிய ஆடம்பர திருமணம் (புகைப்பட தொகுப்பு)

"அவர்கள் இறந்து போனதை விரும்பவில்லை" என்று கூறிய பேரன் வில்லியம் வாட்கின், "இனிமேல் எதுபற்றியும் பேச முடியாது" என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"ஒருவர் இன்னொருவர் இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு, அவர்களின் காதல் மிகவும் வலிமையாக இருந்தது" என்று அந்த தம்பதியர் இருவருக்குத் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கின்போது மகள் கிளாரா கெஸ்கிளின் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Family photo

"அவர்கள் எப்போதும் அன்பில் நிலைத்திருந்தார்கள். கடைசி வரை, கடைசி வினாடி வரை" என்று சிக்காகோவின் புறநகரிலுள்ள அலிங்டன் ஹெட்ஸ் பகுதி ஷலோம் நினைவு இறுதிச்சடங்கு மண்டபத்தில் இறுதிச் சடங்குளை நிறைவேற்றிய ராபி பார்ரி ஸ்செஸ்ஸெட்டர் கூறினார்.

வட்கின்னும், அவருடைய மனைவியும் சனிக்கிழமை மூச்சுவிட கடினமாக உணர்ந்ததை அடுத்து, ஹைய்லாண்ட் பார்க் மருத்துவமனை ஊழியர்கள் அவர்கள் இருவருக்கும் அருகருகே படுக்கைகளை தயார் செய்து வழங்கினர்.

117, உலகிலேயே வயது முதிர்த்த பெண் காலமானார்

முன்னாள் கணவரை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

அந்த தம்பதியர் கைகோர்த்திருந்த நிலையிலேயே அந்த கைகளை இணைந்திருக்கும்படியே குடும்ப உறுப்பினர்களும் வைத்திருந்தனர்.

இல்லினாய்ஸ் ஸ்கோகியில் 3 குழந்தைகளை வளர்த்த இந்த தம்பதியர், பேரக் குழந்தைகளுடன் மிகவும் நெருங்கிய உறவு கொண்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வட்கின் சட்டத்திற்கு உட்பட்டு இறைச்சி விநியோகிப்பவராகவும், அவருடைய மனைவி இல்லத்தரசியாகவும், கைகளையும், விரல் நகங்களையும் பராமரிக்கும் அழகு கலைஞராகவும் விளங்கினர்.

மேலதிக செய்திகள்:

திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்

கருத்தடை மாத்திரைகள் உருவானது எப்படி?

கண்ணாடிப் பாலத்தில் நடுவானில் தொங்கியபடி திருமணம்; சீனாவில் ருசிகரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்