அடுத்த யுத்தம் ஆர்க்டிக்கை ஆளவா? அங்குள்ள ரஷ்யராணுவம் குறித்த பிபிசி காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அடுத்த யுத்தம் ஆர்க்டிக்கை ஆளவா? அங்குள்ள ரஷ்யராணுவம் குறித்த பிபிசி காணொளி

  • 27 ஏப்ரல் 2017

ஆர்க்டிக் வடதுருவத்தில் ரஷ்ய எல்லையை ஒட்டி NATO இராணுவம் குவிக்கப்படுவதாக ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அதேசமயம் வடதுருவப்பிரதேசத்தில் ரஷ்யாவும் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

ஆர்க்டிக் நிலத்துக்குள் புதையுண்டுள்ள பெட்ரோல், எரிவாயுவை எடுக்கவும் அங்கு உருவாகும் கடற்பாதை வருமானத்தை கைப்பற்றவும் பல்வேறு நாடுகள் போட்டி போடத்துவங்கியுள்ளன.

ஆர்க்டிக் மீதான உரிமையை நிலைநாட்டுவதில் ரஷ்யா கூடுதல் கவனம் செலுத்துகிறது.

ஆர்க்டிக் பிரிகேட் என்னும் ரஷ்ய இராணுவ படைப்பிரிவு வடதுருவப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கான பிரத்யேக படைப்பிரிவாக செயற்படுகிறது.

அந்த படையின் நடவடிக்கைகளை படம்பிடிக்க பொதுவாக மேற்குலக ஊடகங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.

பிரிட்டன் செய்தி நிறுவனங்களில் முதல்முறையாக பிபிசிக்கு அதற்கான பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டது.

ஆர்க்டிக் சென்று பிபிசி செய்தியாளர்கள் படம்பிடித்த பிரத்யேக காணொளி.