வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

வட கொரிய பிரச்சனையை சீன அதிபர் ஷி ஜின்பிங் கையாளும் விதம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளார். ஷி ஜின்பிங், தன்னுடைய நாடான சீனாவை நேசிக்கின்ற "நல்லதொரு மனிதர்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

ராய்டஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய டிரம்ப், வட கொரிய பிரச்சனைக்கு ராஜீய வழிகளில் தீர்வு காண விரும்புவதாகவும், அது முடியாத பட்சத்தில், போர் தவிர்க்க முடியாமல் போகும் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய சிறிய வயதிலேயே வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆள்வது "மிகவும் கடினம்" என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கு பதிலடி எப்படி?: தீவிர ஆலோசனையில் அமெரிக்கா - சீனா

இன்று வெள்ளிக்கிழமை வட கொரிய பிரச்சனை பற்றி விவாதிக்க ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது.

வட கொரியா இனி அணு சோதனைகள் நடத்தினால் தடைகள் விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலர் ரெக்ஸ் தில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

சிரியாவில் அமெரிக்கா திடீர் ஏவுகணைத் தாக்குதல் : அதிபர் டிரம்ப் பதிலடி

சீனாவை குற்றஞ்சாட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனல்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வட கொரிய பிரச்சனை தொடர்பாக சீனா போதுமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியதோடு, அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வைத்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய விரிவான பேட்டியில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த அதிபர் டிரம்ப், "கொந்தளிப்பும், மரணமும் ஏற்படுவதை சீன அதிபர் விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

“பெண்களுக்காக குரல்கொடுப்பவர் டிரம்ப்” - இவான்கா பேச்சால் பெண்கள் மாநாட்டில் சலசலப்பு

"அவர் மிகவும் நல்ல மனிதர். அவரை பற்றி நான் நன்றாக அறிய வந்துள்ளேன் சீனாவையும், சீன மக்களையும் அவர் மிகவும் நேசிக்கிறார். ஒருவேளை சாத்தியப்படாது என்றாலும், அவர் ஏதாவது செய்ய விரும்புகிறார்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிம் குறித்து பேசிய டிரம்ப், "அவருக்கு 27 வயதுதான் ஆகிறது. அவர் தந்தை காலமான பின்னர் கிம் ஆட்சிக்கு வந்துவிட்டார். நீங்கள் அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அது எளிதானதல்ல" , என்றார்.

காணொளி: வட கொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வடகொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்?

ஆனால், அவருக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்று இவ்வாறு கூறவில்லை என்று கூறிய டிரம்ப் , கிம் '' பகுத்தறிவுடன் நடந்து கொள்வார்" என்று நம்புவதாகக் கூறினார்.

வாக்கைக் காப்பாற்றினாரா அதிபர் டிரம்ப்?

தடையை மீறி வட கொரியா ஏவுகணை சோதனை

சமீபத்திய மாதங்களில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்துள்ளது. 6வது அணு சோதனையை நடத்த போவதாக மிரட்டி வருகிறது.

வட கொரியா இனி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியதாக தில்லர்சன் வியாழக்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை EPA

சீனாவின் அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டால், என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் குறிப்பாக தெரிவிக்கவில்லை.

இந்த செய்தியை சீனா எப்போது வட கொரியாவிடம் தெரிவித்தது என்றும் தில்லர்சன் விவரிக்கவில்லை. சீனாவிடம் இருந்து இது பற்றி எந்தவித உறுதியும் இதுவரை வழங்கப்படவில்லை.

அணு சோதனை நடத்தாமல் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தாமல், வட கொரியா அதனுடைய முக்கிய பொது நினைவு கொண்டாட்டத்தை நடத்தியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்

பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு

முன்னதாக, கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரிப்பதை தொடர்ந்து, வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

மாஸ்கோவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த புதின் பேசுகையில், இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ளோர் போர் குணமிக்க சொல்லாடல்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காணொளி: டிரம்பின் 'சுவர்' கனவு நனவாகுமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
டிரம்பின் 'சுவர்' கனவு நனவாகுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்