யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருத்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட டாக்டருக்கு நஷ்ட ஈடு

  • 28 ஏப்ரல் 2017
Image caption மருத்துவர் டேவிட் டோ

இந்த மாத தொடக்கத்தில் சிகாகோவிலிருந்து வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றிலிருந்து தரதரவென இழுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட கெண்டக்கி மாநில மருத்துவர் அந்நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெற்றுள்ளார்.

69 வயதாகும் மருத்துவர் டேவிட் டோவின் வழக்கறிஞர்கள், நஷ்ட ஈடு தொகை குறித்த விவரத்தை ரகசியமாக வைக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தரதரவெனெ இழுத்துச் செல்லப்பட்ட விமானப்பயணி

தான் சரியானதையே செய்யப்போவததாக கூறியிருந்த யுனைடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆஸ்கர் முனோஸ் தற்போது சரியானதை செய்துவிட்டார் என்று டாக்டர் டோவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

யுனைடெட் நிறுவனத்தை சேர்ந்த பணியாளருக்கு தன்னுடைய இருக்கையை டேவிட் வழங்க மறுத்ததை தொடர்ந்து சட்ட அமலாக்க அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

ரத்தம் கொட்டிய நிலையில் வியாட்நாமிய - அமெரிக்க மருத்துவர் இழுத்து செல்லப்பட்ட காணொளி இணையத்தில் வேகமாக பரவி, சர்வதேச அளவில் கண்டனங்களை கிளப்பியது.

பழி ஓரிடம், பாவம் ஓரீடம்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்