தொடங்கிவிட்டது வசந்தகால தாக்குதல்: அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகளுக்கு தாலிபன் எச்சரிக்கை

  • 28 ஏப்ரல் 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆஃப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று தங்களுடைய வசந்தகால தாக்குதலின் தொடக்கத்தை அந்நாட்டிலுள்ள தாலிபன் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

மஸார்-இ-ஷெரீஃப் அருகே இருந்த ஆப்கன் ராணுவ தளம் ஒன்றின் மீது கொடூரமான தாக்குதல் தொடுத்து கடுமையான சேதத்தை தாலிபன் ஏற்படுத்தி ஒருவாரம் கழித்து அவர்களது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்தாண்டு அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தாக்குதல் ஒன்றில் தாலிபன் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து, தாலிபனின் இந்த தாக்குதல் முன்னெடுப்பு நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் மன்சூரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

உக்கிரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என உறுதியளித்துள்ள தாலிபன் தீவிரவாதிகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சமூக நீதி வழங்குவது மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவது நோக்கமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்