அணு ஆயுத அச்சுறுத்தல்: வடகொரியாவை தனிமைப்படுத்த உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிக்கி ஹலே, ரெக்ஸ் டில்ல்சர்ன், போரிஸ் ஜான்சன் மற்ரும் மேத்யூ ரைகிராஃப்ட்

"அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் திறனை வடகொரியா மேம்படுத்தும் காலம் நீண்ட தொலைவில் இல்லை" என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், வடகொரியாவை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என மற்ற நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் வடகொரியா நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய டில்லர்சன், தனது அண்டை நாடுகள் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் நிஜமானது என்று தெரிவித்தார்.

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

பலரது வாழ்க்கையில் `விளையாடும் சதாம் ஹுசைன்'!

வடகொரியா மீதான தடைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது அவர்களுடன் ராஜீய ரீதியாக உறவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐநா. உறுப்பு நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை

தேவைப்பட்டால், வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக வடகொரியா தனது அபாயகரமான போக்கைத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட டில்லர்சன், சூழ்நிலையை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.

"தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் நிஜமானது. அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் திறனை வடகொரியா மேம்படுத்தும் காலம் நீண்ட தொலைவில் இல்லை" என்று டில்லர்சன் தெரிவித்தார்.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; டிரம்ப் கோபம்

தேவைப்பட்டால் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்கா அறிவிப்பு

ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், ராஜீய மற்றும் நிதி தொடர்பான நடவடிக்கைகளை வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தும் என்று தெரிவித்தார். குறிப்பாக, வடகொரியாவுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராகவும் தட விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சு நடத்த தயாரா என்று அமெரிக்காவின் என்.பி.ஆர் ஒலிபரப்புக்கு பேட்டியளித்த டில்லர்சன், "கண்டிப்பாக, அந்த வகையில்தான் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், முக்கியப் பிரச்சனை குறித்து எங்களுடன் பேச்ச நடத்த தயாரா என்பதை வடகொரியாதான் முடிவு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

சீனா கருத்து

அதே நேரத்தில், ராணுவ ரீதியான நடவடிக்கை எடுக்கும் எண்ணத்துக்கு எதிராக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரிக்கை விடுத்தார்.

"ராணுவ நடவடிக்கை எடுப்பது பிரச்சனையைத் தீர்க்காது. இன்னும் பல பேரழிவுகளுக்குத்தான் வழிவகுக்கும்" என்று அவர் எச்சரித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராணுவ நடவடிக்கை எடுப்பது பிரச்சனையைத் தீர்க்காது. இன்னும் பல பேரழிவுகளுக்குத்தான் வழிவகுக்கும் : சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

அமைதி வழியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் சரியான, சாத்தியமான நடவடிக்கையாக இருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாதது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஜென்னடி கடிலோஃப் பேசும்போது, வடகொரியா தனது அணு ஆயுத மற்றும் ஏவுகணைத் திட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நிலைமையை சிக்கலாக்கியிருப்பதன் மூலம், தற்போது போர் நடக்குமா என்று உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டன் வலியுறுத்தல்

பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை அவசியம் என்று சுட்டிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை அவசியம் : பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன்

கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றும் முயற்சிக்கான திட்டங்களை செயல்படுத்து தொடர்பாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னேற்றங்களை வடகொரியா மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றிபெறாவிட்டார், "பெரிய, பெரிய மோதல் வெடிக்கும்" என்று அஞ்சுவதாகத் தெரிவித்திருந்தார்.

பதற்றத்தை அதிகரித்த நிகழ்வுகள்

சமீப காலத்தில், பல நிகழ்வுகள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வடகொரியாவின் தோல்வியடைந்த ஏவுகணை சோதனை முயற்சி, மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அதே நேரத்தில், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கியை அந்தப் பிராந்தியத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது அமெரிக்கா.

படத்தின் காப்புரிமை Getty Images

சர்ச்சைக்குரிய ஏவுகணை தடுப்பு வசதியை தென்கொரி தலைநகருக்கு அருகே அமெரிக்கா நிறுவி வருகிறது. ஆனால், இதற்கான செலவை ஏற்றுக்கொள்வது யார் என்பது தொடர்பில் அமெரிக்கா - தென் கொரியா இடையே சர்ச்சை நிலவுகிறது.

'26 லிட்டர் ரத்தத்தில் குரான் எழுதிய சதாம்'

வாக்கைக் காப்பாற்றினாரா அதிபர் டிரம்ப்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்