பாகிஸ்தானில் எருமை அழகுப் போட்டி

  • 30 ஏப்ரல் 2017

பாகிஸ்தானில் நடைபெற்ற எருமை அழகுப் போட்டியில் பங்கேற்ற மொத்தம் 200 எருமைகளில், அஸிகிலி இன எருமை ஒன்று, மிகவும் அழகான எருமை என்ற பட்டத்தை வென்றிருக்கிறது,

படத்தின் காப்புரிமை Wikimedia/Jugni

விவசாயிகளும், எருமைகள் வளர்ப்போரும் பாகிஸ்தானின் வடக்கு பகுதியிலுள்ள ஸ்வாத் மாவட்டத்தின் தலைநகரான மின்கோராவில் மூன்று நாள் நடைபெற்ற இந்த போட்டிக்காக கூடி வந்ததாக டான் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வு அமெரிக்க உதவி நிறுவனமான, அமெரிக்க அரசின் குடிமக்கள் வெளிநாட்டு உதவி நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான முதல் பரிசு ரூ. 75 ஆயிரமாகும்.

தன்னுடைய மாடு இந்த போட்டியில் திறமையோடு பங்கேற்றதில் மகிழ்ச்சியடைந்தார் இதன் முதல் பரிசை வென்ற லெக் பாடார்.

'பசு பாதுகாவலராக ஒரு முஸ்லிம் இருக்க முடியாதா? '

நாம் என்ன சாப்பிடுவது என்பதை முடிவு செய்வது யார்?

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

"இதே இனத்தில் 10 எருமைகளை வைத்திருக்கிறேன். அவைகளே என்னுடைய வாழ்வாதாரம். இன்று முதல் பரிசு வென்ற என்னுடைய எருமையால், நான் பெருமிதமடைகிறேன்" என்று அவர் `டான்` செய்தித்தாளிடம் தெரிவித்திருக்கிறார்.

அஸிகிலி எருமை இனம் அழியும் விளம்பில் இருந்து வந்தது. இந்த அழகான விலங்கை இனப்பெருக்கம் செய்வதன் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வ ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கம் என்று கால்நடை அமைச்சகத்தின் அதிகாரி முஹிபுல்லா கான், பாகிஸ்தானின் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் எருமை அழகுப் போட்டி போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை.

உ.பி.யில் இறைச்சிக் கடைகள் மீதும் இறுகும் பிடி: `பின்னணியில் இருப்பது சட்டமா, மதமா?’

குஜராத்தில், மாடுகளைக் கொன்றால் ஆயுள் சிறை

அஸிகிலி இன எருமை ஸ்வாத் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. இந்த பிராந்தியத்தின் குளிர் காலநிலைக்கு தன்னையே தகவமைத்து கொள்ளுகிற ஒரேயொரு இனம் இந்த எருமை இனம் தான்.

அதாவது, குளிர் காலம் வருகின்றபோது, இந்த எருமைகளின் உரிமையாளர்கள் அவற்றை விற்கவோ அல்லது இறைச்சிக்காக வெட்டவோ வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்பதை இது குறிக்கிறது.

அஸிகிலி இன எருமைகள் அழகாக இருப்பது மட்டுமல்ல, அதிக பாலையும், சிறந்த இறைச்சியையும் வழங்குவதாக இந்த மின்கோரா எருமை அழகுப் போட்டியில் கலந்து கொண்ட நிபுணர்கள் தெரிவித்ததாக டான் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

இந்தியாவில் 25 லட்சம் ரூபாவுக்கு விலைபோன எருமை மாடு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்