கொரியப் பிரச்சனை: அமெரிக்க விநியோக கப்பலை பாதுகாக்க ஜப்பான் போர்க்கப்பல்

  • 1 மே 2017

ஜப்பான் தன்னுடைய ராணுவ பங்களிப்பை விரிவாக்குவதற்கு சர்ச்சைக்குரிய சட்டங்களை இயற்றிய பின்னர், முதல் நடவடிக்கையாக அது தன்னுடைய மிக பெரிய போர்க்கப்பலை அமெரி்க்க போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனுப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

ஜப்பானின் கடற்பரப்பிற்குள் இருக்கும் அமெரிக்க விநியோகக் கப்பலுக்கு ஹெலிகாப்டர் தாங்கியான `ஈஸூமோ` போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்குகிறது.

`கார்ல் வின்சன்` விமானந்தாங்கி கப்பல் அணி உள்பட அமெரிக்கக் கப்பல் கடற்படைக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இந்த பிராந்தியத்திற்கு அந்த அமெரிக்கக் கப்பல் செல்கின்றது.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வருகின்ற பதட்டங்களுக்கு மத்தியில் `கார்ல் வின்சனை`யும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றையும் மூழ்கடித்து விடுவதாக வட கொரியா மிரட்டியுள்ளது.

"அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"

"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து மீண்டும் மீண்டும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னரும் ஞாயிற்றுக்கிழமை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters TV

ஜப்பான் தற்போது பாதுகாப்பிற்கு அனுப்பியுள்ள `இஸூமோ` போர்க்கப்பல் ஜப்பான் கடற்படையின் பெருமையாக பார்க்கப்படுவதோடு, இதுவரை அந்நாட்டில் இருக்கும் மிக பெரிய போர்க்கப்பலாக உள்ளது என்று ஜப்பானில் இருக்கும் பிபிசியின் ருபர்ட் விங்ஃபீல்டு-ஹாயெஸ் தெரிவித்திருக்கிறார்.

249 மீட்டர் நீளம் கொண்ட இஸூமோ போர்க்கப்பல் 9 ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் சக்தியுடைது என்றும், அமெரிக்காவின் நீரிலும், நிலத்திலும் தாக்குதல் நடத்தும் விமானந்தாங்கிகளை போன்றது என்றும் `த ஜப்பான் டைம்ஸ்` தகவல் வெளியிட்டுள்ளது.

வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை; டிரம்ப் கோபம்

ஜப்பானின் மேற்கிலுள்ள ஷிகோகு கடற்பரப்பிற்கு அமெரிக்க விநியோகக் கப்பலுடன் செல்வதற்காக, இஸூமோ கப்பல், டோக்கியோவின் தெற்கிலுள்ள யோகோசுகாவிலுள்ள அதன் தளத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக கேயோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது..

பிரதமரான ஷின்சோ அபேயின் கீழ், ஜப்பான் அதனுடைய நவீன மற்றும் வலிமையான ராணுவம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது.

கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் புதிய சட்டதிட்டங்களை முதல்முறையாக செயல்படுத்த அபே முயற்சி செய்து பார்ப்பதாக தோன்றுகிறது என்று பிபசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜப்பானின் தற்காப்புக்கு மட்டுமன்றி, மோதல்களுக்கு தீர்வு காண்பதற்கு ஆயுத சக்தியை பயன்படுத்துவதை, உலகப் போருக்கு பிந்தைய ஜப்பானின் இரண்டு அரசியல் சாசனங்களும் தடை செய்கின்றன.

வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

கூட்டணி நாடுகள் தாக்கப்பட்டால் உதவி செய்வது என்பதாய், "கூட்டு தற்பாதுகாப்பு" என்று அறியப்படுவதை 2015 ஆம் ஆண்டு ஜப்பான் நிறைவேறிய புதிய சட்டம் அனுமதித்தது.

இந்த புதிய சட்டத்தின்படி ராணுவ பயிற்சிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைக்கு அனுப்பப்படும் முதல் ஜப்பானிய போர்க்கப்பல் `இஸூமோ` கப்பலாகும்.

படத்தின் காப்புரிமை Reuters

இதனால், வெளிநாடுகளில் தேவையில்லாத போர்கள் உருவாகும் என்று இந்த மாற்றத்தை கொண்டு வந்த அபேயின் அரசு விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், அரசு இதனை நிராகரித்துவிட்டது.

ஜப்பானும், அமெரிக்காவும் நடத்திய சமீபத்திய கூட்டு பயிற்சிகள் மற்றும் பிற கடற்படை மேம்பாடுகளை தொடர்ந்து இஸூமோ இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

வடகொரியா பதற்றம் : அணுஆயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா 'தீவிரமாக கவலை'

வட கொரியாவை அச்சுறுத்த கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க கடற்படை

நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கக்கூடிய பிரான்ஸ் கப்பல் ஒன்று, ஜப்பான், பிரிட்டன் கடற்படைப் பிரிவுகள் இணைந்து நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ள சனிக்கிழமையன்று ஜப்பானின் தென் மேற்கு பகுதியை சென்றடைந்துள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவோடு கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியிருக்கிறது.

சீனாவும் அதனுடைய இரண்டாவது விமானந்தாங்கியை கடந்த வாரம்தான் வெள்ளோட்டம் விட்டுள்ளது.

காணொளி: வட கொரியா அருகே கூட்டு ராணுவப் பயிற்சியில் அமெரிக்க - தென் கொரியப் படைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்