இந்தியாவின் செயற்கைக்கோள் `பரிசை` பாகிஸ்தான் ஏன் நிராகரிக்கிறது?

450 கோடி ரூபாய் முதலீட்டில் 'தெற்காசிய செயற்கைக்கோள்' விண்ணில் செலுத்தப்பட தயார் நிலையில் உள்ளது. தெற்காசியாவின் அனைத்து நாடுகளும் தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது 'விலைமதிப்பற்ற பரிசு' என்று 'மனம் திறந்த பேச்சு' என்ற தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை EPA

450 கோடி ரூபாய் முதலீட்டில் 'தெற்காசிய செயற்கைக்கோள்' விண்ணில் செலுத்தப்பட தயார் நிலையில் உள்ளது. தெற்காசியாவின் அனைத்து நாடுகளும் தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது 'விலைமதிப்பற்ற பரிசு' என்று 'மனம் திறந்த பேச்சு' என்ற தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

ஆனால், விலைமதிப்பற்ற பரிசை வேண்டாம் என்று பாகிஸ்தான் மறுப்பதற்கான காரணம் என்ன? அறிவியல் செய்திகளை வழங்கும் நிபுணர் பல்லவ் பாக்லாவுடன், பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா உரையாடியபோது இந்த விஷயத்தின் முக்கியமான மூன்று அம்சங்களை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.

'அனைவருடன் இணைந்து, அனைவரும் மேம்படுவோம்' என்ற பிரதமர் நரேந்திர மோதியின் முழக்கம் விண்வெளி வரை நீண்டு, அண்டை நாடுகளுக்கும் பலனளிப்பதாக பறைசாற்றுகிறது.

தெற்காசிய செயற்கைக் கோள் - இந்தியாவின் `விண்வெளி ராஜதந்திரம்`

5 வயது மகனை தாயிடம் சேர்த்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் நன்றி

இந்தியாவின் முக்கிய இரண்டு அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்காக சீனா செயற்கைக்கோளை ஏவியிருக்கிறது. பிற நாடுகளுக்கும் உதவ சீனா தயாராகவே இருக்கிறது.

இதுபோன்ற தொழில்நுட்பங்கள் தன்னிடமே இருக்கும்போது, அண்டை நாடுகள் சீனாவை அண்டாமல், தன்னையே நாடவேண்டும் என்பது இந்தியாவின் நாட்டம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவிற்கு நன்மையா? நட்டமா?

இதில் இந்தியாவிற்கு எந்தவிதமான நட்டமும் இல்லை. எதிர்காலத்தில் 'இரகசியத்தன்மையை கட்டமைக்கும் முக்கியமான மையமாக' இந்தியா உருவாகிவிடும் என்று கருதுவதால் பாகிஸ்தான் இந்த வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்.

பாகிஸ்தானில் விண்வெளித் திட்டங்கள் இன்னமும் போதுமான அளவு மேம்படுத்தப்படவில்லை. அந்நாடு, செயற்கைக்கோளை இதுவரை தயாரித்ததில்லை என்பதோடு, அதனிடம் பெரிய அளவிலான ஏவுகணைகளும் இல்லை.

சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதை பாதுகாப்பிற்கு இரு கப்பல்களை வழங்கியது சீனா

இந்த கோணத்தில் பார்க்கும் போது, இந்தியாவின் விண்வெளிக்கான பரிசை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்வது அவசியம். ஆனால் இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் மோதல்களின் காரணமாக இந்தியவின் பரிசை ஏற்றுக்கொள்ள பாகிஸ்தானின் மனநிலை இடம்கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

செயற்கைக்கோளை பயன்படுத்தி, இந்தியா உளவு பார்க்கலாம் என்ற சந்தேகம் பாகிஸ்தானுக்கு வருவதும் இயற்கைதான். இருந்தபோதிலும், அப்படி எந்த மூடுமந்திரமும் இல்லை என்று சொல்லி இந்தியா இந்த சந்தேகத்தை புறந்தள்ளிவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் மூன்றாண்டு கால கடின உழைப்பில் உருவாகியுள்ள தெற்காசிய செயற்கைக்கோள் இந்த மாதம் ஐந்தாம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

இந்த தொலைத்தொடர்பு செயற்கைகோளை பயன்படுத்தும் நாடுகள், அலைவாங்கி மூலம் தகவல்களை பதிவேற்றலாம்; பதிவிறக்கலாம். செய்யலாம். செயற்கைக்கோளின் மொத்த கட்டுப்பாடும் இந்தியாவிடமே இருக்கும்.

நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் இந்தியாவுக்கு புதிய விஷயம் இல்லை, அதாவது மாருதி கார் நிறுவனம், சந்தையில் ஒரு புதிய காரை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்பாக சொல்ல்லாம். இந்தியா ஏற்கனவே இந்தியா பல்வேறு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்