கைதான 30 ரோஹிஞ்சாக்களை தடுப்பு முகாமிற்கு அனுப்பிய இலங்கை

  • 2 மே 2017

காங்கேசன்துறை கடற்பரப்பில் சனிக்கிழமை படகு ஒன்றிலிருந்து கைது செய்துள்ள 30 ரோஹிஞ்சா இனத்தவரையும், 2 இந்தியர்களும் திங்களன்று மல்லாகம் நீதிமன்றத்தில் காவல்துறையினர்ஆஜர்படுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இவர்களில் ரோஹிஞ்சா 30 பேரையும் கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதிபதி, இந்தியர்களான இரண்டு படகோட்டிகளையும் வரும் 16 ஆம் தேிதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காவல்துறையினருக்கு ஆணையிட்டுள்ளார்.

காணொளி: ஆளில்லாத்தீவுக்கு அனுப்பப்படும் ரோஹிஞ்சா அகதிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆளில்லாத்தீவுக்கு அனுப்பப்படும் ரோஹிஞ்சா அகதிகள்

இவ்வாறு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கும் ரோஹிஞ்சாக்களில் 14 பேர் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பெரியவர்கள் என்றும் ஏனையோர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அகதி முகாம் ஒன்றில் இருந்து தப்பி வேறு ஒரு நாட்டுக்குச் செல்வதற்காகப் பயணம் மேற்கொண்டபோது, இவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மியான்மார் : ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்குமா?

இந்த செய்திகளையும் நீங்கள் வாசிக்கலாம்

ஜம்முவில் குடியேறிய ரோஹிஞ்சா முஸ்லிம்களின் துயரம்

ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவு : ஐ.நா குற்றச்சாட்டு

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்க மாநாடு

'ரோஹிஞ்சா மக்களுக்காக ஆங் சான் சூசி பேச வேண்டும்': தலாய் லாமா

ரோஹிஞ்சா முஸ்லீம்கள்: பிராந்திய நாடுகள் ஏற்கத்தயங்குவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்