பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

சில நாட்களுக்கு முன்பு வரை வட கொரியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடு இந்தியா என்று பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Chandan Khanna/AFP/Getty Images)

உணவு மற்றும் மருந்து உதவிகள் தவிர வட கொரியாவோடு இருக்கும் பிற எல்லா வர்த்தகங்களையும் நிறுத்திவிடுவதாக இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் தகவல் வெளியிட்டது.

வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் அவை விதித்துள்ள தடைகளை கடைபிடிக்கும் வகையில் இந்த வர்த்தக நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இந்தியா கூறியிருக்கிறது.

ஆனால், சமீப காலம் வரை, இந்தியா வட கொரியாவுக்கு 76.52 மில்லியன் மதிப்பிலான ஏற்றுமதியையும், 132.53 மில்லியன் மதிப்புக்கான இறக்குமதியும் 2014-15 நிதியாண்டில் நடத்தியிருப்பதாக அரசு தரவுகள் குறிப்பிடுகின்றன.

வட கொரியா விவகாரம்: சீன அதிபருக்கு டிரம்ப் திடீர் புகழாரம்

வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்கா திட்டம்

எண்ணெய் உணவுகள், பருத்தி நூல், துணிகள், தாதுக்கள் மற்றும் கனிமப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்கள், ரெத்தின கற்கள் மற்றும் ஆபரணங்கள், உலோகங்கள் மற்றும் இறைச்சி போன்றவை இந்தியா ஏற்றுமதி செய்த பொருட்களில் முக்கியமானவைகளாகும்.

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/Getty Images

இந்தியாவில் இருந்து அதிக நுகர்வு பொருட்களை இறக்குமதி செய்ய வட கொரியா மிகவும் ஆர்வமாக இருந்தாலும், குறைவான அந்நிய செலாவணியும், நிறுவப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு அமைப்பு வழியாக உத்தரவாதமில்லாத பணம் வழங்கும் முறையும் இதனை மிகவும் கடினமாக்கிவிட்டன.

ஐக்கிய நாடுகள் அவை பொருளாதார தடைகளை விதித்த பின்னர் பெரும்பாலான மேற்குலக நாடுகள் வட கொரியாவோடு நடத்தி வந்த வர்த்தகம் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டன.

"அமெரிக்க போர்கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்"

"அணு ஆயுத தாக்குதலுக்கு தயார்" - அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை

வட கொரியா பாகிஸ்தானோடு நெருங்கிய தந்திரோபாய உறவுகளை பேணி வந்தாலும், நீண்டகாலமாக வட கொரியாவோடு அதிகம் விளம்பரப்படுத்திக்கொள்ளாத ராஜீய உறவுகளை இந்தியா பேணிவந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2015 ஏப்ரல் மாதம், வட கொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி சு-யோங் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து, வட கொரியாவை இந்தியாவின் "கிழக்கு நாடுகள் கொள்கையில் சட்டத்தில்" இணைத்துகொள்ள வேண்டுகோள் விடுத்தார்,

படத்தின் காப்புரிமை SAM PANTHAKY/AFP/Getty Images

இரண்டு தசாப்தங்களுக்கு மேலான காலத்தில், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது உயர்நிலை அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுதான்.

வட கொரியோவோடு நடத்திய அனைத்து வர்த்தகங்களுக்கும் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர் டாங்கிகள், தாக்குதல் வாகனங்கள், போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் மற்றும் மென்ரக ஆயுதங்கள் போன்ற பாதுகாப்பு ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட வர்த்தக பொருட்களில் அடங்குகின்றன.

வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

கொரியப் பிரச்சனை: அமெரிக்க விநியோக கப்பலை பாதுகாக்க ஜப்பான் போர்க்கப்பல்

வடகொரிய கடலில் அமெரிக்காவின் புதிய விமானந்தாங்கிக் கப்பல்

வர்த்தக தடை தவிர, வட கொரியாவுக்கு வழங்கப்படும் அறிவியல் பயிற்சி, குறிப்பாக ராணுவ அல்லது போலீஸ் பயிற்சிகள், இயற்பியல், வானூர்தியியல் மற்றும் அணு பொறியியல் பயிற்சிகள் எல்லாம் தடைசெய்யப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வட கொரிய படைப்பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் மகாராஷ்டிராவிலுள்ள படைக்கல்வி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரிய படைகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வட கொரியா அருகே கூட்டு ராணுவ பயிற்சியில் அமெரிக்க - தென் கொரியா

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

வடகொரியா பதற்றம் : அணுஆயுத அச்சுறுத்தல்கள் பற்றி சீனா 'தீவிரமாக கவலை'

தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வட கொரியா திட்டமா?

வட கொரியா அணுகுண்டு சோதனை: தண்டனையை ஆராய்கிறது அமெரிக்கா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்