கறுப்பின நபரை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட போலீசார் மீதான வழக்குப்பதிவு கைவிடல்?

கடந்த ஆண்டு கோடை காலத்தில் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஒரு கறுப்பின நபரை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க நீதித்துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆல்டன் ஸ்டெர்லிங்குக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நினைவகம்

துப்பாக்கிச்சூடு நடத்திய போது, கறுப்பினத்தவரான ஆல்டன் ஸ்டெர்லிங்கை வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் கீழே அழுத்திப் பிடித்து வைத்திருந்தது காணொளி பதிவில் வெளியாகி பேட்டன் ரூஜ் நகரில் பல நாட்கள் ஆர்ப்பாட்டங்கள் தீப்பொறியாக பரவ காரணமாக அமைந்தது.

போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க நீதித்துறை தீர்மானித்துள்ளதாக கூறப்படும் செய்தி பரவியவுடன், கடந்த ஆண்டு இந்த சோக சம்பவம் நடைபெற்ற கடையின் வெளிப்புறத்தில் மக்கள் குழும ஆரம்பத்தினர்.

செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதியில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதே போன்ற மற்றொரு அபாயகரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவரை அவரது முதுகில் சுட்டது தொடர்பாக, சிவில் உரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த செய்திகளையும் நீங்கள் படிக்கலாம்:

திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன்

திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை`

வடகொரிய ஏவுகணையை எதிர்கொள்ள அமெரிக்காவின் `தாட்' இயங்கத் துவங்கியது

பெரிதும் அறியப்படாத இந்திய - வட கொரிய வர்த்தக உறவுகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்