ஆஃப்கானிஸ்தானில் நிகழ்ந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் பலி

படத்தின் காப்புரிமை Getty Images

ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரில் நேட்டோ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வாகன தொடரணி ஒன்றின் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்தாக்குதலில் பலியான அனைவரும் பொதுமக்கள் என்று அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், சுமார் 25 பேர் காயமுற்றுள்ளனர். அதில், மூன்று அமெரிக்க சேவை உறுப்பினர்களும் அடங்குவர்.

காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், அமெரிக்க தூதரகத்துக்கு அருகே ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

ஆஃப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளுக்கு தாலிபன் ஏற்கெனவே அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்