சிங்கப்பூர்: "வீட்டுப்பாடத்தைக் குறை; விளையாட்டை அதிகரி”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வீட்டுப்பாடத்தைக் குறைத்து விளையாட்டை அதிகரிக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் பள்ளிகள் உலக கல்வித்தரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்திருக்கின்றன.

ஆனால் தேர்வுமதிப்பெண்களுக்கு மட்டுமே பிரதனமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை சிங்கப்பூர் அரசு தற்போது மீளாய்வு செய்கிறது.

தரப்பட்டியலைவிட மாணவர்களை எதிர்காலத்துக்கத் தயார்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடுகிறது.

வீட்டுப்பாடத்தை குறைப்பது, வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது; புதிய மதிப்பீட்டு முறையை கொண்டுவருவது என்பதே சிங்கப்பூரின் புதிய திட்டம்.

அதன் மூலம் சிங்கப்பூர் மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தை குறைக்க அரசு முயல்கிறது.

ஆரம்பப்பள்ளித் தேர்வுகளுக்காக பிள்ளைகள் கூடுதல் டியூஷனுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அந்த தேர்வின் முடிவுகளைப்பொறுத்தே அவர்களின் மேநிலைப்பள்ளி இடங்கள் கிடைக்கும் அவர்களின் எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு அதுவே சரி என்று பலர் நம்புகிறார்கள்.

இந்தபின்னணியில், சிங்கப்பூர் அரசு கொண்டுவரும் மாற்றங்களை மாணவர்களின் பெற்றோர் எப்படி பார்க்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்