அதிகளவிலான தொற்று மற்றும் பூஞ்சை நோய்களுடன் தவிக்கும் கடல் டால்ஃபின்கள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

அடைத்து வைக்கப்பட்டுள்ள டால்ஃபின்களுடன் ஒப்பிடும் போது கடலில் வசிக்கக்கூடிய டால்ஃபின்கள் மாசு ஏற்படுத்தும் பொருட்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்கா கடற்கரைக்கு அப்பால் உள்ள பகுதியில் வசிக்கும் இரு டால்ஃபின் குழுக்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகள், அடைத்து வைக்கப்பட்டுள்ள டால்ஃபின்களின் நோய் எதிர்ப்பு அமைப்புகளுடன் ஒப்பீட்டு பார்க்கையில், கடலில் வசிக்கும் பெரும்பான்மையான பாலூட்டிகள் தொடர்ந்து நோய் தொற்றுக்களை எதிர்த்து போராடி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தொற்று நோய்கள் மற்றும் பூஞ்சை நோய்கள், கட்டிகள் மற்றும் பாதரசம் உள்பட பல அசுத்தங்கள் உள்நாட்டில் அடைத்து வைக்கப்படும் டால்ஃபின்களை காட்டிலும், கடலில் வாழும் டால்ஃபின்களில் அதிகளவில் இருந்தததை விஞ்ஞானிகள் ஆவணம் செய்துள்ளனர்.

கடலில் வாழும் டால்ஃபின்களின் உடலில் கண்டறியப்பட்ட தொழிற்சாலை ரசாயனங்களின் அளவு, ஒட்டுமொத்த கடலின் கவலைக்குரிய நிலையை சுட்டிக்காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்