ஓய்வு பெறுகிறார் எடின்பரோ கோமகன்

பிரிட்டிஷ் அரசியின் கணவரும் இளவரசருமான பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பிறகு அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எடின்பரோ கோமகனும் எலிசபெத் அரசியாரின் கணவருமான இளவரசர் பிலிப்

தனது கணவரின் முடிவை அரசியார் முழுமையாக ஆதரித்துள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

எனினும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 96 வயதை எட்டும் அவர், ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty
Image caption எலிசபெத் அரசிக்கும் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்புக்கும் திருமணம் நடைபெற்று 70 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால் எலிசபெத் அரசியார் தொடர்ந்து தனது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கேற்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.