இந்தோனேசிய சிறையுடைப்பு : 100க்கும் அதிகமானோர் தப்பிச் சென்றனர்

இந்தோனேசியத் தீவான சுமத்ராவில் நடந்த சிறையுடைப்பில் 100க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கைதிகளை பிடிக்க உள்ளூர்காரர்கள் போலிஸாருக்கு உதவினர்

பெக்கன்பரு நகரில் உள்ள சியலங் பங்குக் சிறையின் பக்க வாசல் ஒன்றின் ஊடாக பல கைதிகள் தப்பிச் செல்வதை உள்ளூர் தொலைக்காட்சி காண்பித்தது. இந்தச் சிறையில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் அது சன நெரிசலில் இருந்தது.

வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து அறைகளில் இருந்து சுமார் 200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களில் பலர் திரும்ப பிடிக்கப்பட்டுவிட்டனர்.

300 பேரை மாத்திரம் அடைத்து வைக்கக்கூடிய இந்தச் சிறையில் 1900 பேர் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு 6 காவலாளிகள் மாத்திரமே பணியில் இருந்ததாகவும் பிராந்திய சட்ட அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் தம்மை மோசமாக நடத்தியதாக அவர் தொலைக்காட்சிக்கு கூறியுள்ளார்.

நூற்றுக்கணக்கான போலிஸ்காரர்களும் இராணுவமும் தற்போது சிறைக்கு காவலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தப்பியவர்களை தேடும் நடவடிக்கையாக நகரெங்கும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்