அந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்

படத்தின் காப்புரிமை U.S. Air Force

அமெரிக்க ராணுவம் இதுவரை போரில் பயன்படுத்தியதிலே மிகப்பெரிய அணு ஆயுதமில்லாத வெடிகுண்டுக்கு, 'அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய்' என பெயரிட்டதற்கு போப் ஃபிரான்சிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

''அந்த பெயரை கேட்ட போது நான் கேவலமாக உணர்ந்தேன்,'' என்று வத்திகானில் மாணவர்கள் மத்தியில் பேசிய போப் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்

''ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார். ஆனால், இது மரணத்தை மட்டுமே கொடுக்கிறது. இந்த கருவியை தாய் என்று அழைக்கிறோம். என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?'' என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவின் மாபெரும் குண்டு: 36 தீவிரவாதிகள் பலி

கடந்த மாதம், ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது சுமார் 9,800 கிலோ எடை கொண்ட குண்டு ஒன்றை அமெரிக்கா வீசியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images

நங்கர்ஹர் மாகாணத்தில் ஐ எஸ் குழுவினர் பயன்படுத்தி வந்த சுரங்கங்களை குறிவைத்து அமெரிக்க விமானம் ஒன்றின் மூலம் குண்டு வீசப்பட்டதாக அமெரிக்க ராணுவ தலையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மாபெரும் குண்டு: 36 தீவிரவாதிகள் பலி

கணவரை பழிவாங்க 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிய பெண்

'கசக்கும்' காதலை பிரிவதற்கு கட்டணம்

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார் ?

மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்ற விளம்பர பெண் பொம்மைகள்

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்