ஜெர்மனி: ராணுவ குடியிருப்புகளில் நாஜி பொருட்கள் குறித்து தேடுதல் வேட்டை

நாஜி காலத்து நினைவுப்பொருட்கள் இரண்டு ஜெர்மனி ராணுவ குடியிருப்புகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் எல்லா ராணுவ குடியிருப்புகளிலும் நாஜி கால பொருட்களை தேடுகின்ற அதிரடி உத்தரவை ஆய்வாளர்களுக்கு ஜெர்மனி வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாஜி பொருட்கள் குறித்து தேடுதல் வேட்டை

ஜெர்மனி ராணுவ படைப்பிரிவுகளின் தலைமை ஆய்வாளரிடம் இருந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடோல்ஃப் ஹிட்லரை பாதுகாத்த படையான வெயர்மார்ச்டுடன் தொடர்புடைய பொருட்கள் உள்ளனவா என்று எல்லா ராணுவ குடியிருப்புகளிலும் தேடுதல் வேட்டை நடைபெறும்.

சிரியா நாட்டு அகதி போல தன்னை காட்டிகொண்டு, தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ராணவ அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டதோடு, ஜெர்மனி ராணுவத்திற்குள் வளர்ந்து வரும் தீவிர வலது சாரி கடும்போக்குவாதத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை வருகிறது.

தீவிர வலது சாரி கருத்துக்களை தெரிவித்த ராணுவ லெப்டினன்ட் ஏப்ரல் மாதம் கடைசியில் கைது செய்யப்பட்டார்.

28 வயதாகும் இந்த சந்தேக நபர் வெளிநாட்டவரை வெறுக்கின்ற பின்னணியை கொண்டவராக இருந்தார் என்று ஃபிராங்ஃபோர்ட் அரசு வழங்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நாஜி கால் பொருட்கள் ராணுவ குடியிருப்புகளில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்தை ரத்து செய்த ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வென் டெர் லெயென், ஃபிரான்ஸின் வட கிழக்கில் இல்கிரிச்சிலுள்ள காவல் படைத்தளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாஜிக்கள் கால தலைக்கவசம் ஒன்று காட்சி இடத்தில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டதை அடுத்து ஜெர்மனியின் தென் மேற்கில் டுநவ்யெஷிகங்கிலுள்ள ஃபியூஸ்டெம்பர்க் ராணுவ குடியிருப்பும் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

கைத்துப்பாக்கிகள், அதிக தலைக்கவசங்கள் மற்றும் ராணுவ அங்காரங்களோடு, வெயர்மார்ச்ட் சிப்பாய்களின் படங்கள் சுவரில் காணப்பட்டதாக ஸ்பீகல் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

டுநவ்யெஷிகங்கில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், ஜெர்மனியின் சட்டத்தால் தண்டிக்கக்கூடிய நாஜிக்களின் ஸ்வஸ்திகா அடையாளம் போன்ற பொருட்கள் எதுவும் இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும். இன்றைய ராணுவம் வெயர்மார்ச்ட் படைக்கு மரியாதை வழங்குவதை பொறுத்துகொள்ள போவதில்லை என்று வென் டெர் லெயென் தெரிவித்திருக்கிறார்.

எஸ்பிரித் டி கார்ப்ஸை புரிந்து கொள்ளாமல் இருப்பது மூத்த அதிகாரிகளை பிற வழிகளை எடுக்க தூண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், சமீபத்திய இந்த நிகழ்வுகளை தனிப்பட்ட நிகழ்வுகளாக பார்க்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் ஒட்டு மொத்த ராணுவத்தையும் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் எதிரணியினர் குற்றஞ்சாட்டிய பிறகு, இந்த அமைச்சர் தன்னுடைய விமர்சனத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

பிற முக்கிய செய்திகள் :

மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

கருப்பான, பருமனான பெண்கள் மீது ஏன் இவ்வளவு வேறுபாடு?

முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்

ஒல்லியான அழகிகளுக்கு ஃபிரான்ஸ் தடை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்