அதிபர் தேர்தலில் மக்ரோங் வெற்றியின் பின்னணயில் 5 `ரகசியங்கள்'

பிரான்ஸ் அரசியலில் இமான்வெல் மக்ரோங் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார். ஓராண்டுக்கு முன்னால், மிகவும் பிரபலம் இல்லாத,பிரான்ஸ் அதிபர்களில் ஒருவரின் அரசில் உறுப்பினராக இருந்தவர் இவர்.

படத்தின் காப்புரிமை AFP

இப்போது, முதலாவதாக இருந்த பிரதான மத்திய இடது மற்றும் மத்திய வலது சாரி கட்சிகள் மட்டுமல்ல, தீவிர வலதுசாரி கட்சியையும் தன்னுடைய 39வது வயதில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தோல்வியடைச் செய்து மக்ரோங் வெற்றிக்கனியை சுவைத்துள்ளார்.

அடித்தது அதிஷ்டம்

அதிஷ்டக்காற்றால் வெற்றியை நோக்கி மக்ரோங் அடித்துச் செல்லப்பட்டதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

தொடக்கத்தில் முன்னிலை வகித்து வந்த மத்திய வலதுசாரி அதிபர் வேட்பாளர் பிரான்சுவா ஃபிலோங் ஊழல் குற்றச்சாட்டால் பின்னடைவைச் சந்தித்தார், சோஷலிச அதிபர் வேட்பாளர் பென்வா அம்வோங் கட்சியில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்ட நிலையில், இக்கட்சிக்கு பாரம்பரியமாக வாக்களித்து வந்தவர்கள் வேறு தெரிவுகளை செய்துவிட்டதால் பெரும் தோல்வியை சந்தித்தார்.

"சற்றும் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையை மக்ரோங் எதிர்கொண்டதால், அவர் மிகவும் அதிஷ்டக்காரர் ஆகிவிட்டார்" என்று பாரிஸில் இருக்கும் டெர்ரா நோவா சிந்தனை குழுவின் மார்க்-ஆலிவர் பாடிஸ் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption “போலி வேலை” ஊழல் பிரான்சுவா ஃபியேங்கின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துவிட்டது

அவர் புத்திக்கூர்மையானவர்

வெறும் அதிர்ஷ்டம் மட்டும், இக்கதையின் விவரங்கள் முழுவதையும் குறிப்பிட்டுவிடாது.

மக்ரோங் சோஷலிச கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டிருக்கலாம். ஆனால், பல ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த பின்னர், கட்சியின் செல்வாக்கு மக்களிடம் குறைந்துவிட்டதால், அவருடைய முயற்சிகள் பயனற்றுபோகும் என்பதை உணர்ந்து கொண்டார்.

"யாரும் இல்லாதபோது, அங்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம் என்பதை அவரால் முன்னரே கணிக்க முடிந்தது" என்கிறார் பாடிஸ்.

ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங்

ஸ்பெயினில் போடோமோஸ், இத்தாலியில் ஐந்து நட்சத்திர இயக்கம் என ஐரோப்பாவின் வேறு இடங்களில் தோன்றிய அரசியல் இயக்கங்களை அவர் கவனித்திருக்கிறார். பிரான்ஸில் அரசியல் சக்தியை மாற்றவதற்கு இணையான சக்தி இல்லை என்று என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "மக்களால் நடத்தப்படும் 'என் மார்ச்' (அணிவகுப்பு) என்ற இயக்கத்தை தோற்றுவித்தார். நான்கு மாதங்களுக்கு பிறகு அதிபர் பிரான்சுவா ஒலாந்தின் அரசிலிருந்து வெளியேறினார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மக்ரோங் இளைஞராக, புதியவரா, நேர்மறை செய்தியோடு பரப்புரை மேற்கொண்டார்

பிரான்சில் புதியதை நிறைவேற்ற முயற்சி

'என் மார்ச்'-சை நிறுவிய பின்னர், அவர் தன்னுடைய அணியை 2008 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முயற்சித்த அடிமட்ட நிலையில் இருந்து தன்னுடைய ஆதரவாளர்களை அணி திரட்டினார் என்று பாரிஸில் இருக்கும் பகுதிநேர பத்திரிகையாளர் எமிலி செச்சுல்தீஸ் தெரிவிக்கிறார்.

முதன்முதலில் 'கிரான்டே மார்ச்' (மாபெரும் பேரணி) நடத்தி தன்னுடைய அரசியல் தரநிலையை உயர்த்திக் கொண்டார். ஆனால், 'என் மார்ச்' ஆர்வலர்களோ அனுபவம் இல்லாதவர்களாக இருந்தனர்.

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

தேர்தல் பரப்புரையின்போது, 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பரப்புரையில் தன்னார்வத்துடன் பணிபுரிந்திருந்த அரசியல் நிறுவனத்திலிருந்து, பிரான்ஸை முழுமையாக அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களையும், சுற்றுப்புறங்களையும் இனம்கண்டு கிடைத்திருந்த கணிப்பு முறையை மக்ரோங் பயன்படுத்தினர்" என்று செச்சுல்தீஸ் குறிப்பிடுகிறார்.

"3 லட்சம் பேரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று சந்திக்க தொண்டர்களை அனுப்பினர்".

இந்த தொண்டர் படை விரைவாக செயல்பட்டது மட்டுமல்ல, நாடு முழுவதுமுள்ள வாக்காளர்களிடம் இருந்து 15 நிமிடநேர 25 ஆயிரம் பேட்டிகளை எடுத்தனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் பெரியதொரு தரவுதளத்தில் பதிவேற்றப்பட, அவை தான் பரப்புரை முதன்மைகளையும். கொள்கைகளையும் வகுக்க உதவின.

"நாட்டின் நாடி நரம்பை அறிந்துகொள்ள ஓர் இலட்சியத்தை குவிமையமாக வைத்து செயல்படுவதாக இந்த குழு மக்ரோங்கிற்கு அமைந்ததோடு, தொண்டர்களை வீடு வீடாக செல்ல வைத்ததில் இவருடைய இயக்கத்தோடு மக்கள் தொடர்பு வைத்திருப்பதை தொடக்கத்திலேயே அவர் உறுதி செய்துகொண்டார். இந்த முயற்சி இந்த ஆண்டு அவர் செய்ததற்கு களப் பணியாக அமைந்துவிட்டது.

அதனை மக்ரோங் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வரலாற்றிலேயே மிகவும் பிரபலம் இல்லாத பிரான்ஸ் அதிபர்களில் ஒருவரின் அரசில் உறுப்பினராக இருந்தவர் மக்ரோங்

அவரிடம் இருந்தது நேர்மறை செய்தி

மக்ரோங்கின் அரசியல் ஆளுமை முரண்பாடுகளால் நிறைந்திருப்பதாக தோன்றியது.

அதிபர் பிரான்சுவா ஒலாந்தின் சீடராக இருந்து புதிதாக வந்தவர், பொருளாதார அமைச்சர், முன்னாள் முதலீட்டு வங்கியாளர் அடிமட்ட இயக்கத்தை நடத்துகிறார், பொதுத் துறைகளை குறைப்பதற்கு முற்போக்கு திட்டமுடைய மையவாதி என்பதாக முரண்பட்ட நபராகவே தோற்றமளித்தார்.

இதனால்தான், மக்ரோங் சொல்வது போல புதியவர் யாரும் பயனடைய மாட்டார்கள். மேல்தட்டு வர்க்கத்தினரே பயன்பெறுவர் என்று சரியான தாக்குதல் தொடுக்க போட்டியாளர் மெரைன் லெ பென்னுக்கு ரெம்பவே வசதியாக அமைந்துவிட்டது.

'புதியதாக ஒன்று வேண்டும்' என்று மக்களின் மத்தியில் எதிரொலித்ததை வைத்து தனக்கான சுய தோற்றத்தை உருவாக்கி கொண்ட மக்ரோங், இன்னொரு பிரான்சுவா ஒல்லாந்தாக தான் முத்திரை குத்தப்படும் முயற்சிகளை தவிர்த்துவிட்டார்.

"ஃபிரான்சில், ஒரு வழியில் அதிக எதிர்மறையான மனநிலை பரவியிருக்கிறது. மக்ரோங் மிகவும் நேர்மறையான செய்தியோடு வந்தார்" என்கிறார் மார்க்-ஆலிவர் பாடிஸ்.

"அவர் இளைஞர். சக்தி நிறைந்தவர். பிரான்ஸூக்கு என்ன செய்வார் என்று அவர் விளக்கவில்லை. ஆனால், மக்கள் எவ்வாறு வாய்ப்புக்களை பெறுவர் என்று சொன்னார். இத்தகைய செய்தியை கொண்டிருந்தவர் இவர் மட்டுமே".

படத்தின் காப்புரிமை Getty/AFP

மெரைன் லெ பென்னுக்கு பெரும் எதிரி

மக்ரோங்கின் அதிக நேர்மறை தொனிக்கு எதிராக அமைந்த மெரைன் லெ பென்னின் குடிவரவு எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு அடங்கிய பரப்புரைகள் அனைத்தும் எதிர்மறை செய்தியாக வந்தது.

மக்ரோங் பரப்புரை பேரணிகள் அனைத்தும் பிரகாசமான பகுதிகளில், பாப் இசை முழங்க நடைபெற்றதாக கூறுகிறார் எமிலி செச்சுல்தீஸ். ஆனால், மெரைன் லெ பென்னின் பரப்புரை பேரணிகளோ பாட்டில்களை எறிகின்ற, கோப உணர்வுகளை வெளிக்காட்டுகிற போராட்டக்காரர்களாலும், காவல் துறையினர், எதிர்மறை கருத்துடையோர் மற்றும் கோபமுடையோர் நிறைந்திருந்தாக இருந்தது. .

மே மாதம் 3ஆம் தேதி நடத்தப்பட்ட பெரியதொரு தொலைக்காட்சி விவாகத்தில், இரு பக்கத்தினராலும் அவமதிப்புக்குரிய தாக்குதல்கள் அதிகம் நிறைந்திருந்தன.

தந்தையின் அதே கடும்போக்கு பின்னணியோடு மெரைன் லெ பென், அச்சமறியா பெண்ணாக ஏமாற்றும் உள்நோக்கத்தில் அடுத்தவரை கவர எண்ணினார். லெ பென்னின் தந்தை ஒரு சோஷலிச பொம்மையாக இருந்தவர்.

ஸ்திரமில்லாத, பிளவுண்ட தீவிர வலதுசாரி அதிபர் வாய்ப்பை பெறுவதை பற்றி பலரும் எச்சரிக்கை அடைந்தனர். எனவே, மக்ரோங்கை மட்டுமே, லெ பென்னின் அதிபர் ஆகின்ற வழியில் கடைசி தடையாக பார்த்தனர்.

மெரைன் லெ பென் உயர் செயல்திறன் வாய்ந்த பரப்புரை மேற்கொண்டிருக்கலாம். ஆனால், பல மாதங்களாக அவருக்கு மக்களின் ஆதரவு குறைந்து கொண்டே வந்துள்ளது. 30 சதவீதத்திற்கு நெருக்கமான ஆதரவை கடந்த ஆண்டு அவர் கொண்டிருந்தார். என்றாலும், இரண்டு வாரங்களில் இருமுறை அவரை இம்மானுவேல் மக்ரோங் தாோல்வியடையச் செய்துள்ளார்.

நெப்போலியனுக்கு அடுத்து இளவயது அதிபர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நெப்போலியனுக்கு அடுத்து இளவயது அதிபர் மெக்ஹோ(ன்)

இந்த செய்திகளும் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கலாம்

அமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா?

மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர்

வடகொரியாவுக்கு எதிராக சதி? அமெரிக்க பிரஜை கைது

காட்சிக்காக வைக்கப்பட்ட உயிரினங்களின் இனப்பெருக்கத்துக்கு பிரான்ஸ் தடை

கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்

அந்த பெயரை கேட்ட போது கேவலமாக உணர்ந்தேன் : போப் ஃபிரான்சிஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்