நைஜீரியா: பாலியல் அடிமைகளாக இருந்த பள்ளிக்கூடச் சிறுமிகள் மீட்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நைஜீரியா: பாலியல் அடிமைகளாக இருந்த பள்ளிக்கூடச் சிறுமிகள் மீட்பு

மூன்று வருடங்களுக்கு முன்னதாக தீவிரவாத போக்கோ ஹராம் குழுவால் கடத்தப்பட்ட எண்பத்தியிரண்டு பள்ளிக்கூடச் சிறுமிகள், ‘’கைதிகள் பரிமாற்றம்’’ ஒன்றின் கீழ் வார இறுதியில் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களது நாட்டின் அதிபரை இன்று சந்தித்துள்ளனர்.

சிபொக்கில் உள்ள தமது பள்ளிக்கூடத்தில் இருந்து அப்போது முன்னூற்றுக்கும் அதிகமான பெண்கள் கடத்தப்பட்டனர்.

இன்னமும் நூறு பெண்கள் வரை இதுவரை விடுவிக்கப்படவில்லை.