பரபரப்பான சூழலில் நடைபெறும் தென் கொரிய அதிபர் தேர்தல்

தங்களின் முன்னாள் அதிபர் பார்க் குன் ஹீ பதவி நீக்கம் செய்யப்பட்ட காரணமாக இருந்த மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கு பிறகு, தென் கொரியாவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

படக்குறிப்பு,

பரபரப்பான சூழலில் நடைபெறும் தென் கொரிய அதிபர் தேர்தல்

இடதுசாரி சார்பு தலைவரான மூன் ஜே-இன் அதிபர் தேர்தலில் முன்னணி வேட்பாளராக திகழ்கிறார். அவருக்கு சவால் அளிக்கும் நிலையில் அடுத்தபடியாக மையவாத தலைவரான ஆன் சோல்-சூ உள்ளார்.

தென்கொரியாவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்றதன்மை மற்றும் வடகொரியாவுடன் அதிகரித்துள்ள பதற்ற சூழல் ஆகியவற்றுக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் பார்க் குன் ஹீ வடகொரியாவுடனான உறவுகளை முற்றிலுமாக துண்டித்த நிலையில், தற்போதைய பிரதான அதிபர் வேட்பாளர் மூன், வடகொரியாவுடன் நாட்டின் உறவுகளை வளர்க்க விரும்புகிறார்.

படக்குறிப்பு,

தனது மனைவியுடன் பிரதான அதிபர் வேட்பாளர் மூன்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களில், தங்களின் புதிய அதிபரை தென்கொரிய மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ள சூழலில், வாக்குச் சாவடியில் இளைய வாக்காளர்களின் எண்ணிக்கையால் அதிக மக்கள் வாக்களிக்கக்கூடும் என்று தேர்தல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியான தென்கொரியாவை பலவீனமான பொருளாதார நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், நாட்டில் மிகவும் அதிகமாக உள்ள இளைஞர் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை குறைக்கவும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிற முக்கிய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்