வடகொரியாவுடன் நட்புறவை விரும்பும் தலைவர் தென் கொரியாவின் புதிய அதிபராக வாய்ப்பு

  • 9 மே 2017

வடகொரியாவுடன் நட்புக்கரம் நீட்ட விரும்பும் மூன் ஜயே-இனனை தென் கொரிய வாக்காளர்கள் அடுத்த அதிபராக ஒருமனதாக தெரிவு செய்யக்கூடும் என வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் கொள்கையை மூன் முன்வைக்கிறார்

மூன் 41.4 சதவீத வாக்குகள் பெறுவார் என்றும் அவரது போட்டியாளர் ஹொங் ஜூன்-பியோ 23.3 சதவீதமே பெறுவார் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியாவில் ஏவுகணை பாதுகாப்பு அமைக்கும் செலவை ஏற்றது அமெரிக்கா

தற்போதைய தென் கொரிய கொள்கைக்கு மாறாக, வட கொரியாவோடு அதிக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை மூன் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

முன்னாள் தென் கொரிய அதிபர் ஊழல் மோசடியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, முன்னரே அதிபர் தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று.

தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வட கொரியா திட்டமா?

தன்னுடைய நெருங்கிய தோழி நிறுவனங்களில் இருந்து பணம் பறிக்க அனுமதித்ததாக முன்னாள் அதிபர் பார்க் குன் ஹெ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மோசமான காலநிலையிலும் தேர்தல் முடிவுகளை அறிய சோலில் ஒன்றுகூடினர்

மூன் வெற்றி உறுதியானால், புதன்கிழமை அவர் பதவியேற்கலாம் என்று தெரிகிறது.

மூன்று தொலைக்காட்சி நிலையங்களால் இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்:

தென் கொரியா: அதிபர் மீதான குற்ற விசாரணைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

சட்டவிரோத மீன்பிடிப்பு: சீனாவுக்கு தென் கொரியா எதிர்ப்பு

வட கொரியாவுக்கு உதவும் சாத்தியக்கூறுகள் குறைவு: தென் கொரியா அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்