வடகொரியாவுக்கு செல்ல விரும்பும் புதிய தென்கொரிய அதிபர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தன் மனைவியுடன் மூன் ஜே

தென் கொரியாவின் புதிய தலைவராக பதவியேற்று கொண்ட மூன் ஜே அதிபராக தான் ஆற்றிய முதல் உரையில், வட கொரியாவுடனான பொருளாதார மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

சரியான நேரத்தில் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன் ஜே தீர்க்கமான வெற்றியை பெற்றதையடுத்து அதற்கு மறுநாள் சோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற கட்டட அலுவலகத்தில் தனது பதவிப்பிரமாணத்தை எடுத்துள்ளார்.

முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான மூன் ஜே, வட கொரிய அகதிகளின் மகன் ஆவார்.

பரபரப்பான சூழலில் நடைபெறும் தென் கொரிய அதிபர் தேர்தல்

மேலும், தனது தாராளவாத கருத்துக்களுக்காக பெரிதும் அறியப்படுபவர்.

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட கொரியா மற்றொரு அணு சோதனையை நடத்தும் என்ற ஊகத்தில் சமீப வாரங்களாக அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சீற்றமான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

ஐபிஎல் வீரர் ஹாட்ரிக் எடுக்க உதவிய 12 வயது சிறுவனின் `டிப்ஸ்’

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்