பிரபல பாப் இசைப் பாடகர் ஜஸ்டின் பீபர் குறித்த 5 `குறும்புத்' தகவல்கள்

படத்தின் காப்புரிமை Ethan Miller

பிரபல பாப் இசைப்பாடகரான ஜஸ்டின் பீபருக்கும் சர்ச்சைகளுக்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. மும்பையில் அவரது பிரமாண்டமான கச்சேரி நடைபெற்று வரும் நிலையில், அவர் குறித்த ஐந்து சர்ச்சைக்குரிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

  • 2013 ஆம் ஆண்டு கச்சேரி ஒன்றுக்காக வெளிநாட்டில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, தன்னுடைய ரசிகர்களை காண விடுதியின் பால்கனிக்கு வந்த ஜஸ்டின் பீபர் அங்கிருந்தபடியே ரசிகர்கள் மீது எச்சில் துப்ப அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • அதேபோல் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது துப்புரவுப் பணிக்குப் பயன்படுத்தப்படும் வாளியில் பீய்பர் சிறுநீர் கழித்துள்ளார். அக்காணொளி இணையத்தில் பல லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமை ALBERTO PIZZOLI
  • ஆம்ஸ்டெர்டாமில் உள்ள ஆனி ஃபிராங் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஜஸ்டின் பீபர், நாஜிக்களின் சித்ரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட ஆனி என்ற பெண் தன் ரசிகையாக இருந்திருக்கலாம் என்று அருங்காட்சியகத்தின் விருந்தினர் புத்தகத்தில் பதிந்து சர்ச்சையில் சிக்கினார்.
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தன்னுடைய அண்டை வீட்டின் மீது முட்டைகளை வீசி சர்ச்சையில் சிக்கினார் ஜஸ்டின் பீபர். அந்த மாவட்ட ஷெரீஃப் அங்கு அழைக்கப்பட்டு, முட்டைகள் பறந்து கொண்டிருப்பது அவருக்கு காட்டப்பட்டது.
  • மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான டிஸ்னி லேண்டில் நெரிசல் மிகுந்த வரிசையை தவிர்க்க மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை ஜஸ்டின் பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அவருக்கு ஏற்பட்ட காயத்தால் சக்கர நாற்காலியை பயன்படுத்தினார் என்று அவர் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இவையும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்:

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

பாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்?

இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன?

'பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இந்திய பெண் உஜ்மா ஏற்கெனவே திருமணமானவர்?’

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்