வெளிநாட்டினருக்கு அரசு வேலை வழங்குவதை நிறுத்த சவுதி அரேபியா ஆணை

சவுதி அரேபிய அரசு, நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புவழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

தற்போது சவுதி அரேபியாவின் பொதுத்துறையில் சுமார் 70 ஆயிரம் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக நம்பப்படுகிறது.

அடுத்த மூன்றாண்டுகளில் அவர்களுக்கு பதிலாக சவுதி அரேபிய குடிமக்களை பணியமர்த்த வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வேலையில்லாமல் இருக்கும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதி தான் இது.

வணிக வளாகங்களில் உள்ள அனைத்து வேலைகளும் சவுதி அரேபியர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

செளதி அரேபியாவில் உருவாகிறது உலகின் மிகப்பெரிய உல்லாச நகரம்

அமெரிக்கா-வட கொரியா பதட்டம் மோதலில் முடியுமா?

அமெரிக்க ஆயுதங்கள் ஐஎஸ் ஆயுதங்களாவதெப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க ஆயுதங்கள் ஐஎஸ் ஆயுதங்களாவதெப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்