போக்கோ ஹராமால் விடுவிக்கப்பட்டும் குடும்பங்களில் இணைய முடியாதுள்ள சிறுமிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போக்கோ ஹராமால் விடுவிக்கப்பட்டும் குடும்பங்களில் இணைய முடியாதுள்ள சிறுமிகள்

நைஜீரியாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் தமது பள்ளிக்கூடத்தில் இருந்து போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளில் எண்பத்தியிரண்டு பேர் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், அவர்களால் இன்னமும் தமது குடும்பங்களுடன் மீண்டும் இணைய முடியவில்லை.

கடந்த அக்டோபரில் விடுவிக்கப்பட்ட இருபத்தியொரு சிறுமிகளும் இன்னமும் அரசாங்க பாதுகாப்பிலேயே இருக்கிறார்கள்.

போக்கோஹராமால் பிடித்து வைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்து அந்தச் சமூகத்தின் மத்தியில் காணப்படும் ஒருவகை களங்க உணர்வு அங்கு சமூகங்களை சின்னாபின்னமாக்கியிருக்கின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.