கடல் கடந்து கச்சேரிக்கு வந்து உதட்டை மட்டும் அசைத்தாரா பீபர்?
பாப் நட்சத்திர பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசைக்கச்சேரி அறிவிக்கப்பட்டவுடன், அவருடைய இந்திய ரசிகர்கள் உற்சாக நிலைக்கு சென்றனர்.
இசைக்கச்சேரிக்கு சென்றுவிட ஒரு டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கினார்கள்.
ஆனால் சிலருக்கோ, கச்சேரி நடைபெறும் இடமான மும்பையில் உள்ள புறநகர் பகுதி ஒன்றிலுள்ள அரங்கத்திற்கு பயணப்படுவது என்பது சற்று தூரமாக இருப்பதை போன்று கருதினார்கள். சிலருக்கு டிக்கெட்டின் கட்டணம் அதிகமாக தெரிந்தது. அதன் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 75,000 ரூபாய்.
ஆனால், இந்த காரணங்கள் எல்லாம் ஜஸ்டின் ரசிகர்களின் எழுச்சியை கட்டுப்படுத்தவில்லை. ஜஸ்டினின் கச்சேரிகளை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பின்தொடர்ந்து வரும் வெறித்தனமான ரசிகர்கள் பீலிபர்ஸ் என்று பிரபலமாக அறியப்படுகிறார்கள்.
அதன்பிறகு மும்பையில் ஜஸ்டின் பீபர் தேவை என கூறிய முழுமையான பட்டியல் குறித்த செய்தியை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன. ஓர் வாஷிங் மெஷின், கண்ணாடி கதவுகளை கொண்ட குளிர்சாதன பெட்டி மற்றும் ஓர் ஜக்கூஸி ஆகியன உள்ளடங்கிய அந்த பட்டியலை பலரும் விபரீத பழக்கம் என்று வர்ணித்தனர்.
ஆனால், இதுவும் இந்தியாவில் உள்ள பீபரின் வெறித்தனமான ரசிகர்கள் அவரை ஆதரிப்பதிலிருந்து தடுக்கவில்லை.
இதன்காரணமாக பீபரின் இந்தியா வருகையில் எவ்விதமான தவறுகளும் ஏற்படுவதற்கு சாத்தியமில்லாத சூழலே இருந்தது.
ஆனால், இவை எல்லாம் ஜஸ்டின் பீபர் மேடையில் பாடுவதற்கு முன்னால் நிலவியவை.
'லிப் சிங் செய்தாரா ஜஸ்டின் பீபர்?'
கச்சேரி நடைபெறுவதற்குமுன்பு வரை மைதானத்திலிருந்த உற்சாக நிலையை பார்க்கும் போது, எதிர்மறையான கருத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால், ஜஸ்டின் பீபர் அவரது சில பாடல்களை மேடையில் நேரடியாக பாடாமல் வெறும் உதட்டை மட்டும் அசைத்தது போன்று உணர்ந்தார்கள். அது ரசிகர்களிடையே எடுபடவில்லை. ஜஸ்டின் பீபர் பாட்டு பாடிய விதம் குறித்து தங்களுடைய கருத்துக்களை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து ஜஸ்டின் பீபர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.
சட்டையின்றி கிளம்பிய ஜஸ்டின்
இறுதியாக கச்சேரியை முடித்துவிட்டு இந்தியாவிலிருந்து கிளம்பும் போது சட்டையின்றி கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்தியாவில் உள்ள ஊடகங்கள் அது கவனிக்கப்படாமல் போகவில்லை. ஒருவேளை அவர் சட்டையை மாற்றி அணிந்திருக்கலாமோ என்னவோ ?
ரான்சம்வேர் இணைய தாக்குதல் ; 99 நாடுகளில் உள்ள கணினிகள் பாதிப்பு
பாலுறவின்போது பெண்ணின் அனுமதியில்லாமல் ஆணுறையை அகற்றுவது பாலியல் பலாத்காரமா?
2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரியா அரசு உத்தரவு
பதவி நீக்கம் செய்யப்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்